games

img

விளையாட்டு செய்திகள்

சர்வதேச கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்
தமிழ்நாடு வீரர் குகேஷ் சாம்பியன் வென்று அசத்தல்

செஸ் விளையாட்டு உலகின் முன்னணி போட்டியான கேண்டிடேட்ஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் பிரக்ஞானந்தா, வை சாலி, குஜராத்தி உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர் - வீராங்கனைகள் அடுத் தடுத்து வெளியேறிய நிலையில், 17 வயது இளம் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் மட்டும் இறுதி வரை சளைக்காமல் போராடி வந்தார். 13 சுற்று முடிவில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலையில் இருந்த நிலை யில், நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இதனால் கேண்டி டேட்ஸ் தொடர் மிகவும் பரபரப்பாக மாறியது. 

இந்நிலையில்,  அமெரிக்காவின் ஹிகாரு நகாமுராவுக்கும் - தமிழ் நாட்டின்  குகேஷுக்கும் நடைபெற்ற கடைசி சுற்று (14-வது சுற்று) இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடை பெற்றது. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் கடுமையான போட்டிக்கு பிறகு குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் குகேஷின் புள்ளி எண்ணி க்கை 9 ஆக உயர்ந்தது. எனினும் நெபோம் நியாச்சி – பேபியானோ காருனா இடை யிலான ஆட்டத்தின் முடிவின் படியே கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் அறிவிக்கப்படும் என்பதால், அந்த போட்டியின் முடிவுக்காக ஒட்டுமொத்த செஸ் உலகமே ஆவலுடன் எதிர் பார்த்தது. நெபோம்நியாச்சி – பேபி யானோ ஆட்டம் டிரா ஆன நிலை யில், அதிக புள்ளிகளை பெற்ற குகேஷ் (9 புள்ளிகள்) கேண்டிடேட்ஸ் சாம்பிய னாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் கேண்டிடேட் செஸ் சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற மிக இளம் வயது வீரர்  என்ற பெருமையை 17 வயது குகேஷ்  பெற்றார். சாம்பியன் பட்டம்  வென்றதன்  மூலம் தமிழ்நாடு வீரர் குகேஷ் உலக  செஸ் சாம்பியன் ஷிப்பில் சீனாவின்  டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல்
5-ஆவது வெற்றியை குவிக்குமா சென்னை?
இன்று லக்னோ அணியுடன் மோதல்

ஐபிஎல் தொடரின் 17-ஆவது சீசன் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெறும் 39-ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 7   ஆட்டங் களில் விளையாடி 4 வெற்றிகளை குவித்துள்ள நிலையில், 5ஆவது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் டாப் ஆர்ட ரில் பயணிக்கும் முனைப்பில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வியூகங்களுடன் களமிறங்கும் சென்னை அணி
தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதே லக்னோ  அணியை இடைவெளி இன்றி அடுத்த ஆட்டத்திலேயே சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் லக்னோ அணிக்கு பதிலடி கொடுக்க சென்னை புதிய வியூகங்களுடனும், தீவிர பயிற்சியுடனும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை - லக்னோ
(ஆட்டம் - 39)
இடம் : சேப்பாக்கம் மைதானம்,  சென்னை, தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

;