games

img

சமூக வலைத்தளங்களை கண்ணீர் கடலில் கரைய வைத்த இந்தியர்கள்

இங்கிலாந்து நாட்டில் பிறந்து ஆஸ்திரேலிய நாட்டின் பெருமைக்காக கிரிக்கெட் விளை யாட்டின் மூலம் 11 ஆண்டுகள் (1998-2009) போராடிய அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் ஹார்வி ரேஞ் (குயின்ஸ்லாந்து) பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 46 வயதில் சனியன்று உயிரிழந்தார்.  சைமண்ட்ஸ் மரணம் எப்பொழுதும் அதிர்ச்சி, இரங்கல், ஆறுதல், சாத னைகள் தொடர்பான செய்திகள் என  வழக்கம் போல நகர்ந்தன. ஆனால்  உலகமே ஆச்சரியப்படும் உன்னத மான நிகழ்வை இந்திய ரசிகர்கள் அரங்கேற்றியுள்ளனர்.  அது யாதெனில் சைமண்ட்ஸை இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காது.

கார ணம் 2008-ஆம் ஆண்டு இந்திய அணி வீரர் ஹர்பஜனை சிட்னி (ஆஸி.,) டெஸ்ட் போட்டியில் “குரங்கு” என்று  திட்டி இனவெறி சர்ச்சையுடன் யுத்தம் மேற்கொண்டார். அதிலிருந்து சைமண்ட்ஸை கண்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்காது. சைமண்ட்ஸ் இந்திய அணிக்கெதிராக விளையாடினாலும் சரி வேறு அணிக் காக விளையாடினாலும் சரி  அவர்  விரைவில் ஆட்டமிழக்க வேண்டும், இல்லை யென்றால் அவர் வீசும் பந்து வீச்சை எதிரணி பேட்டர்கள் விளாச வேண்டும் என்றெல்லாம் இந்திய ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு வெறுக்கப்பட்டார். இந்த நிகழ்வு எல்லாம் அடுத்த ஒரு வருடத்தில் எல்லாம் மாறியது. காரணம் அடுத்த ஒரு வருடத்தில் (2009-ஆம் ஆண்டு) சைமண்ட்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

 சைமண்ட்ஸ் - கிரிக்கெட் என  இரண்டாக இந்திய ரசிகர்கள் பிரிக்கப் பட்டது போல சைமண்ட்ஸ் விவகாரத்தை பற்றியே மறந்துவிட்டனர். இந்நிலையில், அன்று சைமண்ட்ஸ் தங்கள் நாட்டினரை “குரங்கு” என்று சொன்னதற்காக தங்களது உச்சகட்ட கோபத்தின் வெளிப்பாடு மூலம் உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் பேசப் பட்டார்கள். அதே போல அவரது மர ணத்திலும் இன்று இந்திய ரசிகர்களை உலகம் பேசி வருகிறது. காரணம் ஒரு காலத்தில் வெறுப்பு ஏற்பட்டது என்றா லும் சைமண்ட்ஸ் ஒருமனிதர் தான்.  அவர் சாதனையாளர் : தைரியமானவர்: துடிப்பானவர் என்று இரங்களுடன் சைமண்ட்ஸின் புகழை இந்திய ரசிகர்கள் போற்றியுள்ளனர். பிடித்த நபரோ பிடிக்காத நபரோ எங்களுக்கு தேவையில்லை. ஆனால் அவர் சாதனை உன்னதமானது என்ற வாக்கியங்களுடன் இரங்கல் தெரி வித்து சைமண்ட்ஸூக்காக சமூக வலைத்தளங்களை கண்ணீர் கடலில் கரைய வைத்து கிரிக்கெட் உலகத்தை நெகிழ வைத்துள்ளனர் இந்திய ரசிகர்கள். 

வித்தியாசமான குணநலன்கள் உடையவர்

சைமண்ட்ஸ் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வல்லவர். அமைதியாக தான் இருப்பார். ஆனால் பிடிக்காததை செய்தால் முரட்டு குணத்துடன் மோதுவார். கேப்டன் பொறுப்பில் இல்லையென்றாலும் அணியை தனியாக வழிநடத்துவார். இவரை ஆஸ்திரேலிய அணி 2002 முதல் 2008 வரை அதிகம் நம்பியது. இவர் இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணி சோர்வடைந்தது போல இருக்கும். ஆனால் எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என கணிக்க முடியாத விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர்.

;