games

img

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.  

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகல்லே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 75 ரன்களும் பூஜா வஸ்த்ரகர் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய மகளிர் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுக்க முடிந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது.  

இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்கக வீராங்கனை விஷ்மி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை சமரி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிலாக்‌ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தார். அணியின் மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியாக இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்தியாவின் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய பெண்கள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.  

3வது ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வானார்.

;