games

img

இந்திய அணிக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க விருப்பம் இல்லை? 10 நாட்கள் ஆகியும் பிசிசிஐக்கு பதில் தராத ராகுல் டிராவிட்

இந்திய அணிக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க விருப்பம் இல்லை? 10 நாட்கள் ஆகியும் பிசிசிஐக்கு பதில் தராத ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கேப்ட னும், கிரிக்கெட் உலகின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்படுபவருமான ராகுல் டிராவிட் (50), 2021 முதல் இந்திய ஆடவர் தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.  இவருடைய பதவிக்காலம் உல கக்கோப்பை தொடரோடு (நவம்பர் 19) நிறைவு பெற்ற நிலையில், இவரது பயிற்சியாளர் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தீவிர மாக செயலாற்றி வரும் நிலையில், 10 நாட்களாக ராகுல் டிராவிட் எவ்வித விளக்கம் அளிக்காமல் இருப்பதால், இந்திய கிரிக்கெட் உலகம் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இடைக்கால பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சிக்கு கீழ்தான் தற்போது இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது. டிராவிட்டுக்கு விருப்பம் இல்லை? இளையோர் அணிக்கு சிறப்பாக பயிற்சி அளித்ததால் டிராவிட்டை சீனி யர் அணியின் பயிற்சியாளராக அணி க்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற் கொண்டார் இந்திய அணியின் முன் னள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான கங்குலி. இந்த முயற்சியின் பலனாக 2021இல் டிரா விட் இந்திய அணியின் பயிற்சியாள ராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் நல்ல நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வந்தார். உலகக் கோப்பை தொடருக்கு கடினமான இவ ரது பயிற்சியின் கீழ் இந்திய அணி  இறுதி வரை முன்னேறி கோப்பையை பறிகொடுத்தது. ஆனால் என்ன பிரச்ச னை என்று தெரியவில்லை ஒப்பந்தம் நீட்டிக்க விருப்பம் இல்லாமல் இருப்பது போல தொடர்பில் இல்லாமல் 10 நாட் களாக ஓய்வில் உள்ளார் டிராவிட்.

டிராவிட் பதிலளிக்கும் முன் நெஹ்ராவிடம் பேசியது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் குஜராத் அணி யின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெஹ்ராவை பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியாளர் பணியில் பணியாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால் நெஹ்ரா மறுத்துவிட்டர். ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்து டிராவிட் பதிலளிக்கும் முன்னரே பிசிசிஐ நெஹ்ராவிற்கு அழைப்பு விடுத்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவில்லாத அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ

இந்திய அணியின் பயிற்சியாளர் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலத்தை நீட்டித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக புதனன்று அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,”எதிர்வரும் போட்டிகளிலும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளரா’ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு என்ற விவரம் வெளியாகவில்லை. மேலும் பயிற்சியாளராக தொடர டிராவிட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்
சென்னை அணியில் தமிழ்நாடு வீரர் ஷாருக்கான்?

17 சீசன் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு (2024) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் டிச.19 அன்று துபாயில் நடைபெறு கிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த ஞாயிறன்று வெளி யிட்டது. ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு அணியாக கருதப்படும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிடோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா,  சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்த வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.32.1 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தின் போது தமிழ்நாடு வீரர் ஷாருக் கானை ஏலம் எடுக்க சென்னை அணி கடுமையாக கடைசி வரை போராடியது. அவரை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி தற்போது விடுவித்துள்ள நிலையில், மினி ஏலத்தில் ஷாருக்கானை சென்னை அணி நிர்வாகம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியில் தமிழ்நாடு வீரர்கள் யாரும் இல்லை என்ற குறையை தீர்க்க ஷாருக்கானை கண்டிப்பாக ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.