games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை நடுக்கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில், சனியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து
நேரம் : காலை 10:30 மணி
இடம் : தர்மசாலா, இமாச்சலப் பிரதேசம்

நெதர்லாந்து - வங்கதேசம்
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சீனா - 2023

ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய வீரர்

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் ஆசிய பாரா  விளையாட்டுப் போட்டி தொடரின் 4-ஆவது சீசன் கடந்த அக்., 22 அன்று  சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கி யது. அக்., 28 வரை நடைபெறும் இந்த தொடரின் 5-ஆவது நாளான வெள்ளி யன்று ஆடவர் நீளம் தாண்டுதல் (டி-64) பிரிவில் கடுமையாக போராடி இந்தியாவின் தர்மராஜ் 6.80 மீ தாவி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். வில்வித்தை : மகளிர் ஒற்றையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் சீட்டல் தேவி தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் (காம்பவுண்ட்) இந்தியாவின் ராகேஷ் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். தடகளம் : ஆடவர் 1500 மீ ஓட்டப் பந்தயத்தில் (டி-38) இந்தியாவின் ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்றார்.  ஆடவர் குண்டு எறிதல் (எப்-37) பிரிவில் இந்தியாவின் மனு வெண்கலப்பதக்கம் வென்றார். மகளிர் குண்டுஎறிதல்  பிரிவில் இந்தியாவின் லட்சுமி 22.55 மீ குண்டை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் (எப்-54) இந்தியாவின் லக்சித் வெண்கலப்பதக்கம் வென்றார். 

ஒரே நாளில் 4 தங்கம்

பேட்மிண்டன் : ஆடவர் ஒற்றையர் பிரிவில் (எஸ்எல்-3) இந்தியாவின் பிரோமத் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் (எஸ்எல்3) இந்தியாவின் சுகாஸ் யாத்திராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.  மகளிர் ஒற்றையர் பிரிவில் (எஸ்யு-5) இந்தியாவின் துளசிமதி தங்கப்பதக்கம் வென்றார்.  இதேபோல ஆடவர் இரட்டையர் பிரிவில் (எஸ்எல்3 - எஸ்எல்4) நிதேஷ் - தருண் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் (எஸ்எல்-6)  நிதேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவின் மகளிர் இரட்டையர் பிரிவில் (எஸ்எல்3, எஸ்யு5) இந்தியாவின் துளசிமதி - மானஷி ஜோஷி வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் (எஸ்யு-5) இந்தியாவின் ராஜ்குமார் - சிராக் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது.  ஆடவர் ஒற்றையர் (எஸ்ஹெஜ்6) பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கம் வென்றார்.