games

img

ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023

பாகிஸ்தான், இலங்கை நாட்டில் கூட்டாக நடை பெற்று வரும் 16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபா ளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங் கள் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக இரு அணி களும் இருப்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.  மழை விளையாட வாய்ப்பு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடை பெறும் கண்டி நகரில் வெள்ளியன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட 90% மழை பெய்ய வாய்ப்புள்ள தால் போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

நாளைய ஆட்டம்
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : மதியம் 
3:00 மணி
இடம் : பல்லேகலே மைதானம், கண்டி, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி)