games

img

விளையாட்டு செய்திகள்

இஸ்லாமாபாத்
உலகக்கோப்பை வென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கும் ரூ. 2 கோடி பரிசுத்தொகை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. ஜூன் 1 அன்று தொடங்கும்  தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும்  நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 நாடுகளும் தங்களது அணி விபரத்தை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை  வென்று கொடுத்தால் ஒவ்வொரு வீரருக்கும் 1,00,000 அமெரிக்க டாலர் (பாகிஸ்தான் மதிப்பில் ரூ.2 கோடி - இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் ஒரு நாடு அளிக்கும் பிரம்மாண்ட பரிசுத்தொகை இதுவாகும். இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பை வென்றால் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை
பிறப்புறுப்பில் பந்து தாக்கி 11 வயது சிறுவன் பரிதாப பலி
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் பெரு நகரங் களில் வலை அமைப்புடன் கூடிய குட்டி, குட்டி கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. டென்னிஸ் பந்துகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் இந்த மைதானங்களில் ஒருமணிநேரத்திற்கு 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வீட்டில் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால் சிறுவர்கள் இதுபோன்ற மைதானங்களில் அதிகம் விளையாடமாட்டார்கள். வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமே இந்த குட்டி கிரிக்கெட் மைதானங்களில் விளையாடு வார்கள். தற்போது விடுமுறை காலம் என்ப தால் வீட்டில் பணத்தை பிடுங்கிக் கொண்டு சிறுவர்கள் குட்டி மைதானங்களிலும் ரவுண்ட்ஸ் வர ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புனேவில் உள்ள குட்டி கிரிக்கெட் மைதானத்தில் 4 பேர் கொண்ட சிறுவர்கள் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது 11 வயது மிக்க சிறுவன் வீசிய பந்தை எதிர்கொண்ட அதே வயதுடைய மற்றொரு சிறுவன், பந்தை ஆக்ரோஷமாக (பேட்டிங் செய்து) அடித்துள்ளான்.

அதிவேகத்தில் வந்த பந்து, பந்து வீசிய 11 வயது சிறுவனின் பிறப்புறுப்பின் மீது ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் நிலை குலைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே சுருண்ட விழுந்தான். உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் என்ன நடந்தது  என்பது தெரியாமல் அருகில் உள்ள பெரியவர்களை உதவிக்கு அழைக்க, சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விவகாரம் இந்திய விளையாட்டு உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை சீசன்... சிறுவர்களுக்கு  அப்டோமேன் கார்ட் கொடுப்பது நல்லது

நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட்டே கதி என்று கிடக்கிறார்கள். வெளிப்புற மைதானங்களை விட பரப்பளவில் மிக சிறியதாக இருக்கும் தனியார் நிறுவனங்களின் குட்டி மைதானங்களில் பந்துவீச்சு தாக்குதல் மோசமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கவசம் வழங்குவது நன்றாக இருக்கும். குட்டி மைதானங்களில் சாதாரண டென்னிஸ் பந்து தானே என்று சிறுவர்கள், இளைஞர்கள் பாதுகாப்பு கவசமின்றி அசால்ட்டாக விளையாடி வருகிறார்கள். புனேவில் சிறுவனை தாக்கிய பந்து “கார்க்” வகையைச் சேர்ந்த கடினமான பந்து கிடையாது. சாதாரண டென்னிஸ் பந்து தான் என்றாலும், தாக்கிய வேகம் மிக மோசமானது ஆகும். அதுவும் பிறப்புறுப்பில் தாக்கியதால் சிறுவன் வலி தாங்காமல் சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழந்துள்ளான். இதனால் குட்டி மைதானங்களில் டென்னிஸ் பந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் அப்டோமேன் கார்ட் (பிறப்புறுப்பு பாதுகாப்பு கவசம்) அணிவது நல்லது.

ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்

தில்லி - ராஜஸ்தான்
(56ஆவது ஆட்டம்)

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

;