games

img

ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஜசிசி விருது!  

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.  

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி பரிந்துரைந்திருந்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் ஜானி பேர்ஸ்டோ, டேரில் மிட்செல், ஜோ ரூட் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.  

இதில் கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற ஜானி பேர்ஸ்டோ மிகவும் உதவியாக இருந்தார். 162 மற்றும் 71 நாட் அவுட்களுடன் அவரது சாதனையை தொடரின் கடைசி போட்டி வரை தொடர்ந்தார். இதனால் அவரை ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்த்தியது. இதையடுத்து, ஜோ ரூட், டேரில் மிட்செல் ஆகியோரும் ஜூலை மாதத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.  

ஐசிசி ஆண்கள் பிரிவில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுக்க வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது அணியினர் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்று பேர்ஸ்டோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

பெண்களுக்கான பிரிவில் தென்னாபிரிக்கவை சார்ந்த மரிஜோன் கப் தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.