games

img

டி20 உலகக் கோப்பை 2022 - இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்னில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு 

2022 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதிவரை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்த நிலையில்,  இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன என ஐசிசி தெரிவித்துள்ளது. 

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

7ஆவது டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இடம்பெற்றிருந்தது. வங்கதேசம் முதல் சுற்றிலிருந்து விளையாடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;