games

img

ஐபிஎல் 2024

டி-20 உலகில் புதிய வரலாறு படைத்த பஞ்சாப் அணி

120 பந்துகளில் 262 ரன்கள் சேஸிங் செய்து அசத்தல்
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம், நவீன கால புத்திகூர்மை, பய மில்லா செயல்பாடு உள்ளிட்டவைகளால் டி-20 கிரிக்கெட் போட்டிகள் மிகவும் மாறுபட்ட பாதையில் பயணித்து வரும் நிலையில், உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொட ரில் கனவில் நினைக்க முடியாத சம்பவங்கள் கூட உண்மையாகவே நிகழ்ந்து வருகிறது. கடந்த 16 சீசன்களில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் 17ஆவது சீசனில் உலகளவிலான சாதனைகள் அடுத்தடுத்து தகர்க்கப்பட்டு வருகிறது. 

262 ரன்களை துரத்திய அதிசயம்
வெள்ளியன்று நடைபெற்ற 42-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு  செய்ய கொல்கத்தா அணி வழக்கம் போல அதிரடி ஆட்டத்தில் இயங்கியது. சால்ட் (75), நரைன் (71) ஆகியோரின் அதி ரடி ஆட்டத்தின் உதவியால் கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது. 

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பேர்ஸ்டோ - சிம்ரன் சிங்கிற்கு அணி நிர் வாகம் என்ன ஆலோசனை வழங்கியது என்று தெரியவில்லை, களத்தில் புகுந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை இருவரும் பந்தாடினர். 20 பந்துகளில் அரைசதம் அடித்த சிம்ரன் சிங் 58 (20) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோசோவ் 26 (16) சிறிது அதிரடி காட்டி விட்டு வெளியேறினார். அடுத்து கள மிறங்கிய சஷாங் சிங் பேட்டிங்கில் ருத்ர தாண்டவம் ஆடினார். அதுவரை விக்கெட் சரியாமல் இருக்க சீரான ஆட்டத்துடன் விளையாடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ வும் மிரட்டலான ஆட்டத்தை கையிலெ டுக்க கொல்கத்தா மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தது. இந்த ஜோடியை கழற்ற கொல்கத்தா அணி பல்வேறு வியூகம் அமைத்த நிலையில், அனைத்தும் பலனளிக்காமல் போனது.

ரன் குவிப்பில் தொடர்ந்து வேகம் காட்டிய பேர்ஸ்டோ சதமடித்த நிலையில், ஷஷாங் சிங்கும் அரைசதமடித்து அசத்தி னார். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை (262 ரன்கள்) எளிதாக எட்டி யது. பேர்ஸ்டோ 108 (48), ஷஷாங் சிங் 68 (28) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதில் சுவாரஸ்ய மான விஷயம் என்னவென்றால் 120 பந்துகளில் 262 ரன்கள் என்ற மிக மிக கடினமான இலக்கை 8 பந்துகளை மீதம் வைத்து  துரத்தியது விளையாட்டு உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து ஆட்டத்தைச் சேர்ந்த பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் அணியின் வெற்றியை கொண்டாடும் கிரிக்கெட் உலகம்
கடந்த 2023இல் தென் ஆப்பிரிக்க அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 259 ரன்களை சேஸிங் செய்ததே டி-20 உலகின் அதிகப்பட்ச சேஸிங் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை யாரும் நெருங்க முடியாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி மிக எளிதாக தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை தகர்த்துள்ளது. 262 ரன்களை அசால்ட்டாக சேஸிங் செய்து உலக சாதனை படைத்துள்ள பஞ்சாப் அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் சிக்ஸர் மழை
42 சிக்ஸர்கள் ; சாதனை முறியடிப்பு

கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மொத்தம் 42 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ள நிலையில், இதுவும் உலக சாதனை அம்சமாக வரலாறு படைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 24 சிக்ஸர் விளாசியுள்ள நிலையில், கொல்கத்தா அணி 18 சிக்ஸர் விளாசிய நிலையில், இதற்கு முன் ஹைதராபாத் - மும்பை அணிகள் 38 சிக்ஸர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. ஹைதராபாத் - மும்பை அணிகள் 38 சிக்ஸர்கள் சாதனை நடப்பு ஐபிஎல் சீசனில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தகர்க்கப்பட்டது. அதற்கு முன் கடந்த 2018இல் ஆப்கானிஸ்தான் லீக் தொடரில் பால்க் - காபூல் அணிகள் 37 சிக்ஸர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

குஜராத் - பெங்களூரு
(ஆட்டம் - 44)
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : மதியம் 3:30 மணி

சென்னை - ஹைதராபாத்
(ஆட்டம் - 45)
இடம் : சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

;