ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய, இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இவர் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பல சாதனைகளை படைத்த கிறிஸ் கெய்ஸ், 943 பந்துகளில் மைல்கல்லை எட்டினார்.
சூரத் நகரை சேர்ந்த 28 வயதான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் களத்தில் 2015 சீசன் முதல் விளையாடி வருகிறார். இவர் மொத்தம் 96 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா, 1046 பந்துகளில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். வெளிநாட்டு வீரர்களில் ரஸ்ஸல் 657 பந்துகளிலும், கிறிஸ் கேல் 943 பந்துகளிலும் 100 சிக்சர் விளாசி முதல் 2 இடத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் ரிஷப் பன்ட் (1224 பந்து), யூசுப் பதான் (1313), யுவராஜ் சிங் (1336) முறையே 6வது, 7வது, 8வது இடங்களில் உள்ளனர்.