games

img

விளையாட்டு... ஐபிஎல் இன்னும் 6 நாட்கள்

திருநங்கைகள் ஆதிக்கம் செய்வதால் புதிய விதிகளை கொண்டுவர முடிவு

உலக தடகளப் போட்டிகளில் பாலின ஆய்வு கட்டாயமாகிறது

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள  சாம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட அனைத்து சர்வதேச தொடர் களில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலின வளர்ச்சி  மீதான கட்டுப்பாடுகளை கடுமை யாக்க சர்வதேச தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது. 

என்ன காரணம்?

விளையாட்டு உலகில் திருநங்கை களுக்கான தனி போட்டி தொடர்கள் எதுவும் கிடையாது. இதனால் சில  திருநங்கைகள், திருநம்பிகள் அறு வை சிகிச்சை மூலம் பெண்களாக மாறி, பெண்கள் பிரிவில் விளை யாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்களாக மாறினாலும், அவர்களின் உடல்களில் ஆண்களுக்கான உடல்வாகு, பலம், ஹார்மோன், தசை வளர்ச்சி என அப்படியே இருக்கும். இதனால் திரு நங்கைகள் பெண் உருவத்தில் மறை முகமாக களமிறங்கி ஆடவர் உத்வேகத்திறனுடன் பரிசுகளை அள்ளுகின்றனர். இதனை தடுக்கவே திருநங்கைகள் ஆண்களின் பருவ வயதை அடைந்திருந்தால் அவர்கள் சர்வதேச பெண்களுக்கான போட்டி களில் பங்கேற்க தடை விதித்துள்ள தாக உலக தடகள சம்மேளனம் அறி வித்துள்ளது. மேலும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் உள்ள விளையாட்டு வீராங்கனைகளின் மீதான கட்டுப்பாடு களை கடுமையாக்கவும் உலக தடகள சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தனி வாக்கெடுப்பு மற்றும் கூட்டங்களை நடத்தி ஆதர வையும் பெற்றுள்ளது. உலக தடகளப் போட்டிகளில் பாலின ஆய்வு கட்டா யமாக்கும் முடிவிற்கு 71% ஆதரவு  இருப்பதாகவும் தகவல் வெளியாகி யுள்ளதால் ஏறக்குறைய புதிய பாலின விதி அடுத்த ஒலிம்பிக் தொடர்  தொடங்குவதற்குள் அமல்படுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் : அஸரென்கா அபாரம்

அமெரிக்காவின் முக்கிய டென்னிஸ் தொடர்களில் ஒன்றான மியாமி ஓபன் டென்னிஸ் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது.  இந்த தொடரில் தற்போது 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும்  நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில்  அதிரடிக்கு பெயர் பெற்ற பெலாரஸ்  வீராங்கனை அஸரென்கா இத்தாலி யின் கேமிலாவை 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சமீபத்தில் நிறைவுபெற்ற இந்தியன் வேல்ஸ் சாம்பியனான ரைப கினா, ரஷ்யாவின் அன்னாவை 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கவுப், லாத்வியாவின் ஒஸ்டாபென்கா, பிரேசிலின் மாயா ஆகியோ ரும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

தியம் அதிர்ச்சி

முன்னணி டென்னிஸ் வீரரும், அஸ்திரிய நாட்டவருமான டொமினிக் தியம் நீண்ட காலத்திற்கு பிறகு மியாமி தொடரில் களமிறங்கினார். தியம் தனது முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் லொரன்சோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7-9), 2-6 என்ற செட் கணக்கில்  வீழ்ந்து தியம் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். 

நீக்கம் செய்யப்படுகிறாரா சூர்யகுமார்?

ஐபிஎல் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் மிடில் ஆர்டர் வீரராக சேர்க்கப்பட்ட சூர்யகுமார் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 360 டிகிரி பட்டம் பெற்றார். வருங்காலத்தில் சச்சின், சேவாக், ரோஹித், கோலி போன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத நபராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஹாட்ரிக்கில் தங்க முட்டை (0) வரலாறு படைத்துள்ளார். இது சற்று மோசமான விஷயம் என்பதால் ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் விளையாடுவதை பொறுத்தே வரும் காலங்களில் இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ பரிசீலிக்கும் என்பது குறுப்பிடத்தக்கது.

 

;