games

img

விளையாட்டு...

சூதாட்ட கும்பல் தொடர்பு கொண்டனர்

முகமது சிராஜ் பிசிசிஐயிடம் புகார்

கடந்த மார்ச் மாதம் இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு இடையே யான ஒருநாள் தொடரின் பொழுது சூதாட்ட கும்பல் தன்னை அணுகியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) புகார் தெரி வித்துள்ளார். தொடர்பு கொண்ட நபர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததாகவும், இந்திய அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடிய தாகவும் சிராஜ் விளக்க கடிதமும் அளித் துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ துரித விசாரணையில் களமிறங்கி யுள்ளது.

அரையிறுதியில் ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான ஐரோப்பிய கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 68-வது  சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று நடைபெற்ற 2-வது காலிறுதி ஆட்டத்தின் 2-வது சுற்றில் செல் சியா(இங்கிலாந்து) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)  அணிகள் மீண்டும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது. காலிறுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்ற நிலையில், 4-0 என்ற கோல் கணக்கில் செல்சியாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி 2-வது அணி யாக அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி கிளப் அணியான ஏ.சி.மிலன் 2-1 (2 லெக்) என்ற கோல் கணக்கில் மற்றொரு இத்தாலி கிளப் அணியான நபோலியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதி கரிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் புதிய தொடரை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தி வருகிறது.  2019-2021ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற முதல் சீசனில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் (2021-2023) தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  ஜூன் மாதம் 7-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதா னத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலை யில், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்கள் விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை-கேப்டன்), டேவிட் வார்னர்,  உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, ஸ்காட் போ லண்ட், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹாசில்வுட்,ஜோஷ் இங்லிஷ், நாதன் லயன்,  டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா,  மிட்செல் ஸ்டார்க்.

ஐபிஎல் - 2023

தில்லி வீரர்களின் கிரிக்கெட் உபகரணங்கள் திருட்டு

கர்நாடக மாநிலம் பெங்களூவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பின்பு தில்லி விமான நிலையத்தில், தில்லி அணி தரையிறங்கியது. தரை யிறங்கிய பிறகு தில்லி அணி குழுவின் உடைமைகள் மற்றும் டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்சேல் மார்ஷ், யாஷ் துல் உள்ளிட்ட வீரர்களின் ரூ.16 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக தில்லி அணி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - பெங்களூரு
இடம் : பிந்த்ரா மைதானம், மொஹாலி (பஞ்சாப்)
நேரம் :  மதியம் 3:30 மணி

தில்லி - கொல்கத்தா
இடம் : தில்லி மைதானம்
நேரம் :  இரவு 7:30 மணி

(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஓடிடி - ஜியோ சினிமா)