games

img

இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 201 கி.மீ வேகத்தில் பந்து வீசினாரா..?

ஞாயிறன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதி ரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார்  201 கி.மீ வேகத்தில் பந்துவீசியதாக, பந்துவீச்சின் வேகத்தை  கணிக்கும் “ஸ்பீட் கன்” திரையில் காட்டியது.  தொலைக்காட்சியில் இந்த நிகழ்வை கண்ட கிரிக்கெட் உலகம் வாயடைத்துப் போனது. 162 கிமீ வேகத்தில் பந்து வீசுவதே முடியாத காரியம் என்ற நிலையில், மித வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் எப்படி 201 கி.மீ வேகத்தில் பந்துவீசினார் என்று மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் “ஸ்பீட் கன்” பிழை செய்ததன் காரணமாக இது நிகழ்ந்தது என தெரியவந்தது.  கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் மணிக்கு 161.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதே சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;