games

img

தில்லி உண்மையான குற்றச்சாட்டு இருந்தால் பதிவு செய்ய உரிமை உண்டு தவான் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு

எனது புகழையும், பெயரையும் பொது இடத்தில் கெடுத்து விடுவதாகவும், ஐபிஎல் அணியான தில்லி கேப்பிடல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான தீரஜ் மல்ஹோத்ரா முன் அவதூறான செய்திகளை கூறுவதாகவும் தனது முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி மீது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”தவானுக்கு எதிராக பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவ தூறான பதிவுகளைப் பகிரக்கூடாது எனவும், “உண்மை யான” குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம்” என ஆஷாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இரண்டு உத்தரவுகளில் தவானுக்கு ஒன்று சாதகமாகவும், மற்றொன்று பாதகமாகவும் உள்ளது.  இந்த விவகாரம் தவானுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷா முகர்ஜி.... கிக் பாக்ஸர்...

தவான் கிரிக்கெட் வீரர் என்றாலும் ஆஷா முகர்ஜி முரட்டு விளையாட்டில் இருப்பவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா முகர்ஜி ஒரு கிக் பாக்ஸர் (குத்துசண்டை) ஆவார். ஆஸ்திரேலியாவிற்காக தேசிய, சர்வதேச அளவில் விளையாடி உள்ளார். முகநூல் நட்பு மூலம் தவானை 2012-ஆம் ஆண்டு கரம்பிடித்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்தானது.