நெதர்லாந்து - இலங்கை
இடம் : ஏகானா மைதானம்,
லக்னோ, உ.பி.,
நேரம் : காலை 10:30 மணி
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா
இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா
நேரம் : மதியம் 2:00 மணி
குஜராத்... மோடி.. அமித்ஷா... ஜெய்ஷா...
டம்மியாக்கப்பட்ட மும்பை மைதானம்
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் வான்கடே என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் உள்ளது. பெரியளவில் பிரம்மாண்ட மைதானம் இல்லை என்றாலும், வான்கடே மைதானம் தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்டுள்ளதால் சகல வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு, அருகிலேயே நட்சத்திர ஹோட்டல்கள், சிக்கலின்றி வீரர்கள், ரசிகர்கள் சென்று வர இட வசதி, மைதானத்தில் இருந்து விரை வாக வெளியேற அகலமான பெவிலி யன் பாதை வசதிகள் என பல்வேறு வசதி கள் இருப்பதால் நாட்டின் முதன்மை யான கிரிக்கெட் மைதானமாக மும்பை வான்கடே மைதானம் உள்ளது. இதனால் உலகக்கோப்பை, முக்கியமான சர்வதேச தொடர், ஐபிஎல் தொடக்கம் மற்றும் இறுதி ஆட்டம் மும்பை வான்கடேவில்தான் காலங்கா லமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையால், குஜராத் மாநில த்தின் அகமதாபாத் நகரில் உள்ள உல கின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதான மான நரேந்திர மோடி மைதானம் புழக்கத்தில் வந்ததில் இருந்து, கிரிக்கெட் உலகில் பிரசித்திப் பெற்ற மும்பை வான்கடே மைதானம் டம்மி யாக்கப்பட்டுள்ளது.
குஜராத்... மோடிக்காக...
மும்பை வான்கடே மைதானம் டம்மி யாக்கப்பட்டது சாதாரண காரியத்திற் காக அல்ல. 4 சுயநலமிக்க காரணத்திற் காக, பல்வேறு சித்து விளையாட்டுகள் மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 1.அகமதாபாத் மைதானம் மூலம் பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் பிரபலமடைய வேண்டும். 2.அகமதாபாத் மைதானத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் (நரேந்திர மோடி) மூலம் மோடியின் பெருமை உலகமெங்கும் ஒலிக்க வேண்டும். 3.மோடி - அமித் ஷா - ஜெய் ஷா (அமித் ஷா மகன்) கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கல்லா நிரம்ப வேண்டும். 4.மோடி முதல்வராக இருந்த பொழுது அவரது ஆட்சியில் நிகழ்ந்த கோத்ரா கலவரம் மட்டுமே குஜராத்தின் அடையாளமாக உள்ள நிலையில், அகமதாபாத் மைதானத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கப்படு கிறது. இந்த 4 காரணத்திற்காகவே அக மதாபாத் மைதானத்தை ஒன்றிய பாஜக அரசு பிரபலமடைய வைக்க முயற்சிக்கிறது. மும்பை மைதானத்தை டம்மி யாக்கி அகமதாபாத் மைதானம் பிரபல மாக்க பல்வேறு முயற்சி மேற்கொள்ள ப்பட்டாலும், அகமதாபாத் மைதா னத்தின் உண்மை நிலைமை படுமோச மானதுதான். இதனை பற்றி நாளை பார்க்கலாம்...