games

img

அதிரடி தன்மையை இழக்கும் கிரிக்கெட் மைதானங்கள்

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணி யின் பலம், பலவீனம், வீரர்-வீராங்க னைகளின் திறமை இதுதான் மிக முக்கிய மானது என்றாலும், அதை விட முக்கிய மானது மைதானங்களின் தன்மை. காரணம் பிட்ச் பகுதியில் புற்கள் இருந்ததா? வறண்டு இருக்கிறதா? இல்லை மிதமாக இருக்கிறதா? என்ற அடிப்படையில் வெற்றி நிர்ணயம் செய்யும் வாய்ப்பு மைதானங்களுக்கு 60% உள்ளது. இது அனைத்து மைதானங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நாட்டிலும் காலநிலைக்கு ஏற்ப மைதா னங்களின் தன்மை மாறுபடும். மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் ஆடுகளம் மிதமாக (வேகப்பந்து மெதுவாக எகிறும்) இருக்கும். மேற்கூறிய இரு பகுதிகள் வானிலை வெப்பமண்டல பகுதியாகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கி லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் குளிர்கால நிலையால் மைதானம் உயி ரோட்டமாக இருப்பதால் பந்து தாறு மாறாக எகிறும். தென் ஆப்பிரிக்கா நாடு வித்தியாசமான காலநிலை கொண்டுள் ளதால் சற்று வித்தியாசமாக வேகம், சுழற் பந்துவீச்சுகள் சரிசமமாக சுழலும். இதுதான் கிரிக்கெட் உலகின் மைதான வரலாறு. 

இந்த வரலாற்றில் அடங்கிய இங்கி லாந்து, அயர்லாந்து மைதானங்கள் வேறு நிலைக்கு சென்றுள்ளது. வெப்ப மயமாதலால் ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற ஐரோப்பா கண்ட கிரிக்கெட் மைதானங்களின் நிலைமை முற்றிலு மாக மாறி வருகிறது. எப்பொழுதும் பசு மையாய், இயற்கையை போன்று அழ காக இருக்கும் இங்கிலாந்து மைதானங் கள் தற்போதைய காலநிலை மாற்றத் தால் (வெயில் கொளுத்தி வருவதால்) பசுமையை முற்றிலும் இழந்துவிட்டது. இதற்கு சாட்சி இந்தியா - இங்கி லாந்து தொடர் தான். இந்த தொடரில் பந்துவீச்சும் சரிவர சரியாக அமைய வில்லை. எப்பொழுதும் சொந்த மண் ணில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் இங்கிலாந்து அணி இந்திய அணி யிடம் கடுமையாக போராடி ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்று ஒருநாள், டி-20 தொடரை இழந்தது. முக்கியமாக இந்திய அணி யிடம் இங்கிலாந்து அணி தோல்வியை எதிர்கொண்டதற்கு மைதானம் தான் முக்கிய காரணம் ஆகும். தனது நாட்டின் திறமைக்கு ஏற்ப மைதானம் மாற்றி வந்த நிலைமை மாறி காலநிலைக்கு ஏற்ப மைதானத்தை மாற்றும் நிலைமை உரு வாகியுள்ளது என்பது தான் விளை யாட்டு உலகில் பேரதிர்ச்சி.