அமெரிக்க ஓபன் டென்னிஸ்
19 வயதில் சாம்பியன் பட்டம் வென்று கவுப் அசத்தல்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும் பெலாரஸ் நட்சத்திரமுமான சப லென்கா, 6-ஆம் நிலை வீராங்கனை யும் 19 வயது உள்ளூர் நாயகியுமான அமெரிக்காவின் கவுப்பை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா முதல் செட்டை 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் சுதாரித்து அதிரடியில் இறங்கிய கவுப், 2-வது செட்டை 6-3 கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் 3-வது செட்டில் கவுப் இயல்பாக விளையாட, சபலென்கா சொதப்பலான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். அதாவது சபலென்கா அதிக தவறுகளை செய்ய இதனை சாதக மாக பயன்படுத்திக்கொண்ட கவுப் மூன்றாவது செட்டையும் கைப்பற்றி, 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெறும் 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்தார்.
ரூ.24 கோடி
சாம்பியன் பட்டம் வென்ற கவுப் ரூ.24 கோடி யும், 2-ஆம் இடம் பிடித்த சபலென்கா ரூ.12 கோடியும் பரிசுத்தொகையாக வென்றனர். இதுபோக அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்று ஆட்டங்களில் வெளியேறியவர்களுக்கு போதுமான அளவு பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது.
சாதனையா?
19 வயதில் கவுப் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது சாதனை அல்ல. 1997இல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 16 வயதில் (16 ஆண்டு 117 நாட்கள்) சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்ஹிஸ் பட்டம் வென்றதே, மிக குறைந்த வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்ற வரலாற்றுச் சாதனையாக உள்ளது. 1979இல் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் டிராஸி ஆஸ்டின் 16 வயதில் (16 ஆண்டு 270 நாட்கள்) பட்டம் வென்றார். டிராஸி ஆஸ்டின் அமெரிக்க ஓபன் வரலாற்றில் மிக குறைந்த வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது “சூப்பர் 4” சுற்று ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், திங்களன்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செவ்வாயன்று “சுப்பர் 4” சுற்றின் 4-வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
நெருங்க கூட முடியாது
தெரிந்துகொள்வோம்...
தற்போதைய உலகில் அனைத்து நாடுகளும், அனைத்து விளையாட்டு போட்டிகளை கற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. ஒருகாலத்தில் நம்மால் கால்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என அஞ்சிய இந்திய விளையாட்டு உலகம் தற்போது கால்பந்தில் தூள் பரத்துகிறது. இப்படி பல்வேறு நாடுகளும் தெரியாத, புரியாத விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டம் கூட வென்றுவரும் வரலாற்று சம்பவங்களும் அரங் கேறி வருகின்றன. ஆனால் உலகின் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்தில் அமெரிக்கா காலங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது வும் 84 ஆண்டுகாலம். உலக கூடைப்பந்து சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் எந்த தொட ராக இருந்தாலும் அமெரிக்காவை நெருங்க கூட முடியாத நிலைமை உள்ளது. கூடைப்பந்து மட்டுமல்ல, பேஸ்பாலில் அமெரிக்காவின் ஆதிக்கம் வலுவாக உள் ளது. மேலும் தவிர்க்க முடியாத முரட்டு பார்மில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.