games

img

விளையாட்டு...

ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் மோதல்

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் ஐபிஎல் தொடர் வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வெள்ளியன்று தொடங்கி, மே 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் மோதுகின்றன. 

சென்னை - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத் 
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், 
ஜியோ சினிமா (ஹாட் ஸ்டார் இல்லை)

தமிழ்நாட்டில் எப்பொழுது ஐபிஎல் ஆட்டம்?

வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை - லக்னோ அணிகள் மோதும் 6-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 16-வது ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், வெறும் 7 ஆட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு?

கிரிக்கெட் உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான ஆசியக்கோப்பையின் 16-வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பாதுகாப்பு பிரச்சனை யை காரணம் காட்டி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஆசியக்கோப்பையில் பங்கேற்காது 6 முறை சாம்பியனான இந்தியா என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் ஆசிய கோப்பையில் இந்திய அணி மோதும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு பிசிசிஐ அனுப்பவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை அல்லது வங்க  தேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு பிசிசிஐ-க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மியாமி ஓபன் டென்னிஸ்
அரையிறுதியில் சின்னர்

அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-ஆம் இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் இல்லாத பின்லாந்தின் எமிலை  6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
 


 

;