games

img

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023

45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.  அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 வெண்கலம்

ஆடவர்
ஆடவர் ரோலர் ஸ்கேட்டிங் அணி பிரிவில் ஜூமான், வேல்குமார், ராகுல், விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (4:10.128 நிமிடத்தில்) வெண்கலப்பதக்கம் வென்றது. இப்பிரிவில் சீன தைபே அணி (4:05.692 நிமிடத்தில்) தங்கப்பதக்கமும், தென் கொரியா அணி (4:05.702 நிமிடத்தில்) வெள்ளிப்பதக்கமும் வென்றது.
மகளிர்
மகளிர் ரோலர் ஸ்கேட்டிங் அணி பிரிவில் சஞ்சனா, கார்த்திகா, ஹீரல், கஸ்தூரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி (4:34.861 நிமிடத்தில்) வெண்கலப்பதக்கம் வென்றது. சீனதைபே அணி (4.19.447 நிமிடத்தில்) தங்கப்பதக்கமும், தென் கொரியா அணி (4.21.146 நிமிடத்தில்)வெள்ளிப்பதக்கமும் வென்றது.

ஒரு வழியாக பதக்கப்பட்டியலில் இடம்பெற்ற பாகிஸ்தான்

ஆசிய கண்டத்தில் பெரிய நாடுகளில் ஒன்றான  பாகிஸ்தான் பரப்பளவில் 8-வது பெரிய நாடாகவும், மக்கள் தொகையில் 4-வது பெரிய நாடாகவும் உள்ளது.  2 முக்கியமான சிறப்பு அம்சங்களை பெற்றிருந்தாலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியாமல் வழக்கம் போல திணறி வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கி 7 நாட்கள் ஆகிய நிலையில், வெள்ளியன்று மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப்பதக்கமும், சனியன்று ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒரு வழியாக பதக்கப்பட்டியலில் இடம்பெற்றது பாகிஸ்தான்.  பாகிஸ்தானை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் குட்டி நாடாக இருக்கும் நாடுகள் கூட  இரண்டு, மூன்று பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் கம்பீரமாக 20 இடங்களுக்கு மேல் உள்ளது. ஆனால் விளையாட்டு தொடர்பான அனைத்து கட்டமைப்பு மற்றும் சகல வசதிகள் இருந்தும் ஆசிய  விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் 28-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். கடந்த சீசனில் (2018 - இந்தோனேசியா) பாகிஸ்தான் 4 வெண்கலம் மட்டுமே வென்று 34-வது இடத்தை பிடித்தது. இம்முறை ஒரு வெள்ளி வென்றதால்  சற்று மேல்நோக்கி சென்றுள்ளது. 1962 ஆசிய விளை யாட்டு சீசனில் (இந்தோனேசியா) பாகிஸ்தான் அணி  8 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம்  28 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்ததே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானின் சிறப்பான செயல்பாடாக உள்ளது. இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், பாகிஸ் தானின் நிலைமை என்னவென்று பார்க்கலாம். 

டேபிள் டென்னிஸில் முகர்ஜி ஜோடி சாதனை

மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவு அரையிறுதி ஆட்ட த்தில் இந்தியாவின் அகீதா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜீ ஜோடி, வடகொரி யாவின் சுயோங், சுகியோங் ஜோடியை எதிர்கொண்டனர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் வடகொரிய ஜோடி வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இந்தியாவின் அகீதா முகர்ஜீ, சுதிர்தா முகர்ஜீ ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவேமுதல்முறையாகும்.

ஜப்பான் - தென் கொரியா இடையே கடும் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா முதலிடத்தில் டாப் கியரில் பறந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், 2-ஆம் இடத்தை பிடிக்க தென் கொரியா - ஜப்பான் நாடுகள் கடும் போட்டியில் மோதிக் கொண்டு இருக்கின்றன. இரு நாடுகளும் தங்கத்தில் (30) ஒரே மாதிரியாக இருந்தாலும், ஜப்பான் (43) அதிக வெள்ளியை வென்றுள்ளதால் தென் கொரியா (39 வெள்ளி) 3-வது இடத்திற்கு உள்ளது. எனினும் மொத்த பதக்க எண்ணிக்கையில் தென் கொரியா (131) அதிக பதக்கங்களை வென்றுள்ளது. ஜப்பான்  117 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. 

பதக்கப் பட்டியல்

    தங்கம்      வெள்ளி      வெண்கலம்    மொத்தம்
1.சீனா    142    76    39    257
2.ஜப்பான்    30    43    44    117
3.தென்கொரியா    30    39    62    131
4.இந்தியா    13    21    22    56