ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
திடீரென மாறிய கொழும்பு மைதானத்தின் தன்மை
விளையாட்டு உலகின் தலை சிறந்த சர்வதேச மைதானங் களில் ஒன்றான பிரேமதாசா மைதானம் இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ளது. இந்த மைதானம் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டும் சரிசமமாக எடுபடும் சிறப்பு உடையது. ஆனால் ஆசியக்கோப்பை தொடரில் என்ன ஆனது என தெரியவில்லை மைதானத்தின் தன்மை திடீரென மாறியது. அதாவது பேட்டிங் பிட்சாக மாறியது. பந்துவீச்சு ஓரளவுக்கு மட்டுமே எடுபடுகிறது. பேட்டிங் அனு பவமில்லாத பந்துவீச்சாளர்கள் கூட கொழும்பு மைதானத்தில் பந்தை நாலா புறமும் பறக்கவிட்டு தூள்பரத்துகிறார்கள். மைதானத்தின் தன்மை மாறியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மழை ஒரு காரணம் என்று சொன்னா லும், இலங்கை, இங்கிலாந்து போல குளிர்ந்த காற்று வீசும் பிரதேசம் அல்ல. குளிர்ந்த காற்று வீசினால் மட்டுமே பிட்ச் பகுதி மாறும். மழை மட்டுமேபெய்கிறது. மற்றபடி வானிலை எப்பொழுதும் போல உள்ள நிலையில், கொழும்பு மைதானத்தின் தன்மை மாறியது விளை யாட்டு உலகில் கடும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஓய்வுநாள்
பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் 16-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று ஆசியக்கோப்பை தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் 5-வது “சூப்பர் 4” சுற்று ஆட்டம் வியாழனன்று நடை பெறுகிறது. கடைசி “சூப்பர் 4” சுற்று ஆட்டம் வெள்ளியன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. “சூப்பர் 4” சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறு திக்கு முன்னேறும் என்ற நிலையில், செப். 17 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
2023இன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்கள்
டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களாக இருப்பது கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் ஆகும். காரணம் அதிக பரிசுத்தொகை சிறப்பு ஏற்பாடுகள், மைதானத்தின் தன்மை, பிரம்மாண்ட கேலரிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களால் கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் தனிச்சிறப்பை பெற்றுள்ள தால் உலகின் முக்கிய தொடர்கள் என்ற கவுரவத்தை பெற்றுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரே லியா, பிரெஞ்சு (பிரான்ஸ்), விம்பிள்டன் (பிரிட்டன்), அமெரிக்கா என 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடை பெறுகின்றன. விளையாட்டு உலகில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு வீரர் - வீராங்கனைகளின் கனவாக இருப்பது போல, டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் போட்டி களில் பட்டம் வெல்வது ஒவ்வொரு வீரர் - வீராங்கனைகளின் பிரம்மாண்ட கனவாக உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் களும் நிறைவு பெற்ற நிலையில், இரு பாலர் ஒற்றையர் பிரிவுகளின் சாம்பி யன் பட்டியலை காணலாம்:
ஆடவர் ஒற்றையர் பிரிவு
ஆஸ்திரேலியா : ஜோகோவிச் (செர்பியா)
பிரெஞ்சு : ஜோகோவிச் (செர்பியா)
விம்பிள்டன் : அல்காரஸ் (ஸ்பெயின்)
அமெரிக்கா : ஜோகோவிச் (செர்பியா)
மகளிர் ஒற்றையர் பிரிவு
ஆஸ்திரேலியா : சப்லென்கா (பெலாரஸ்)
பிரெஞ்சு : ஸ்வியாடெக் (போலந்து)
விம்பிள்டன் : வொன்டரஸ்சோவா (செக்குடியரசு)
அமெரிக்கா : கவுப் (அமெரிக்கா)