டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து பல சாதனை களை குவித்துவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வங்கதேசத் திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உலக கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி யுள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர்கள் என்றால் பிளிண்டாஃப், ஜாக் காலிஸ், இயான் போதம், காரி சோபர்ஸ், இம்ரான் கான், ஷான் பொல்லாக் என மற்ற நாட்டு வீரர்களின் பெயர் தான் ஞாபகம் வரும். இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் யார் என்று தேடினால், கபில்தேவ் பெயரை முதன்மை பெறும். அவருக்கு பிறகு இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் காலத்திற்கான ஆல்ரவுண்டர் யாரும் இல்லை. ஆனால் கபில்தேவ் கூட செய்யாத ஒரு சாதனையை அவரை பின்னுக்கு தள்ளி முதல் இந்திய வீரராக செய்து காட்டி சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் அஸ்வின்.
குறைந்த போட்டிகளில் அதிக ரன்கள்
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப் பற்றி, 3,000 ரன்களை குவித்துள்ளார். 86 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இச்சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி குறைவான போட்டிகளில் இதை நிகழ்த்தி காட்டி யுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் மற்றும் 3,000 ரன்கள் என்ற சாதனையை படைத்த வீரர்கள் பட்டியல்,
ரிச்சர்ட் ஹாட்லீ
நியூசிலாந்து அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான ரிச்சர்ட் ஹாட்லீ, டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்ஸில் 431 விக்கெட்டுகளை எடுத்து, 3124 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் வர லாற்றில் 400-க்கும் மேற்பட்ட விக் கெட்டுகள் மற்றும் 3000-க்கும் அதிக மான ரன்களை எடுத்த சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.
கபில் தேவ்
இந்தியாவின் ஹரியானா சூறாவளி என்று அழைக்கப்படும் கபில்தேவ், 227 இன்னிங்ஸ்களில் 434 விக்கெட்டு களை எடுத்து, 5248 ரன்கள் குவித்துள் ளார். வேகப்பந்து வீச்சாளர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை கபில்தேவ் தக்கவைத்துக் கொண்டிருந் தார்.
ஷேன் வார்ன்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வார்னே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3154 ரன்களை எடுத்துள்ளார். வார்னின் 3154 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காத வீரர்களில் அதிக பட்சமாக உள்ளது. 273 இன்னிங்ஸ் களில் 708 விக்கெட்டுகளை எடுத்து குவித்துள்ளார்.
ஷான் பொல்லாக்
தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஷான் பொல்லாக் 202 இன்னிங்ஸ் களில் 421 விக்கெட்டுகளையும், 3781 ரன்களையும் அடைந்துள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாள ரான ஸ்டூவர்ட் பிராட், இதுவரை 566 விக்கெட்டுகளை (293 இன்னிங்ஸ் களில்) வீழ்த்தியுள்ளார். மேலும் 3550 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 2010 லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 9வது இடத்தில் பேட்டிங் செய்து 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து காலத்திற்குமான டெஸ்ட் ஆல்ரவுண்டர்
ஐசிசி அனைத்து காலத்திற்குமான தரவரிசைப் பட்டியலில் அதிக புள்ளி களை பெற்று முதல் 20 இடத்தில் இருக்கும் ஒரே இந்திய வீரராக ரவிச்சந்தி ரன் அஸ்வின் உள்ளார். இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ்க்கு பிறகு, அஸ்வின் அதிகபட்ச புள்ளிகளாக 2016-ஆம் ஆண்டு பெற்ற 492 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்தில் உள்ளார்.