games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் - ஆஸ்திரேலியா அணி எப்படி?

சொந்த மண்ணில் போட்டியை நடத்துவதால் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஓராண்டு முதலே அணி வீரர்களை தேர்வு செய்வதில் உளவுத்துறை ரேஞசில் களமிறங்கி வேலை செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். மிகுந்த போராட்டத்துடன் கடந்த மாதம் முதல் அணியாக உலகக்கோப் பைக்கான வீரர்கள் விபரத்தை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியா. மிகவும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பிளஸ் பாய்ண்ட் என்ற அடிப்படையில் மட்டும்தான் உள்ளது. மைனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருப்பினும் கேப்டன் பிஞ்ச், ஆடம் ஜம்பா, மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சற்று பார்ம் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தொடர் தொடங்க இன்னும் 2 வார காலம் உள்ள நிலையில், அதனை சரி செய்வார்களா? இல்லை உலகக் கோப்பையில் சொதப்புவார்களா? என் பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

(அக்., 16 - நவ., 13, ஆஸ்திரேலியா)

வீரர்கள் விபரம் :
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ்
(வி.கீ), மேத்யூ வேட் (வி.கீ), மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல்
ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
(உள்ளூரில் தொடர் என்பதால் அவசரத்தில் வீரர்களை தேர்வு செய்து களமிறக்கலாம் என்பதால் மாற்று வீரர்கள் அறிவிக்கவில்லை)

ஷார்ட்ஸ்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே வருகிற 6-ஆம் தேதி சொந்த நாட்டுக்கு திரும்பி அதிகாரிகள் முன் சரணடைய உள்ளதாக தகவல்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். முதுகு வலி காரணமாக பும்ரா விலகியதாக செய்திகள் வெளியாகியது.

;