games

img

விளையாட்டு செய்திகள்

56 ரன்களில் சுருண்ட ஆப்கானிஸ்தான்
உலகக்கோப்பையில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. வியாழனன்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், ஜென்சன் (3), ரபாடா (2), நோர்ஜே (2) ஆகியோர் களின் மிரட்டலான வேகத்தையும், ஷம்சியின் (3) அசத்தலான சுழலை யும் சமாளிக்க முடியாமல் ஆப் கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் 56 ரன்களில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வீரர் அஜ் மதுல்லா (10) மட்டும் இரட்டை இலக்கத் தில் ரன் எடுத்த நிலையில், மற்ற வீரர் கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த னர். டி-20 உலகக்கோப்பை வரலாற் றில் அரையிறுதி ஆட்டத்தில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி  என்ற  மிக மோசமான சாதனையை ஆப்கானிஸ் தான் அணி படைத்துள்ளது.

எளிதான இலக்கு

120 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப் பிரிக்கா, தொடக்கத்திலேயே குயிண்டன் டி காக்-கை (5) இழந்தது. எனினும் கேப்டன் மார்கிராம் (23) , ஹென்ரிக்ஸ் (29) ஆகியோர் நிதான அதிரடியுடன் தென் ஆப்பிரிக்க அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு குவியும் வாழ்த்து

தென் ஆப்பிரிக்காவிற்கு ஜூன் 27 பொன்னான நாளாக அமைந்துள்ளது. காரணம் தலைசிறந்த, பலம் வாய்ந்த,  அபாயகரமான அணியான தென்  ஆப்பிரிக்கா ஒருநாள், டி-20 உலகக் கோப்பையில் என ஒட்டுமொத்த உல கக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறி இருந்தது. இறுதிக்கு இதுவரை முன்னேறாத நிலையில், முதன்முறையாக இறு திக்கு முன்னேறி தனக்கென்று ஒரு புதிய வரலாறை படைத்துள்ள தென் ஆப்பி ரிக்கா அணிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து - 2024
ரொனால்டோவின் போர்ச்சுக்கலை பந்தாடிய “இளங்கன்று ஜார்ஜியா”

17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடர் ஜெர்மனி நாட்டில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது  லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலை யில், வியாழனன்று அதிகாலை நடைபெற்ற  “குரூப் எப்” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் முன் னாள் சாம்பியனான (2016) ரொனால்டோவின் போர்ச்சுக்கல், இளம் அணியான ஜார்ஜியா அணிகள் மோதின. ஜார்ஜியாவை விட போர்ச்சுக்கல் மும்மடங்கு பலமான அணி என்ற நிலையில், போர்ச்சுக்கல் வீரர்கள் அசால்ட்டாக விளையாடி னர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அதிரடி  ஆட்டத்துடன் ஆதிக்கம் செலுத்திய ஜார்ஜியா, ஆட்டத்தின் 2ஆவது நிமி டத்தில் கோலடித்து போர்ச்சுக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 

தொடர்ந்து 57ஆவது நிமிடத்தில் ஜார்ஜியா மீண்டும் ஒரு கோலடிக்க, போர்ச்சுக்கலும் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தது. ஆனால்  ஜார்ஜியா கோல்கீப்பர் ஷிவில்லி துடிப்பாக செயல்பட்டு போர்ச்சுக்கலின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் அசத்தலாக தடுத்தார். ஆட்டநேர முடி வில் கால்பந்து உலகின் இளம் அணியான ஜார்ஜியா 2-0 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் போர்ச்சுக்கலை பந்தாடி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது. போர்ச்சுக்கலை ஜார்ஜியா வீழ்த்தி இருப்பது கால்பந்து உலகில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோபா அமெரிக்கா - 2024
மெக்சிக்கோவிற்கு அதிர்ச்சி அளித்த வெனிசுலா

அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வியாழனன்று அதிகாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெக்சிக்கோ - வெனிசுலா அணிகள் மோதின. வெனிசுலாவை விட மெக்சிக்கோ மிகவும் பலம் வாய்ந்த அணி என்ற நிலையில், ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்தில் கோலடித்து வெனிசுலா 1-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று மெக்சிக்கோவிற்கு அதிர்ச்சி அளித்தது.