ரொனால்டோ இல்லாமல் வலுவான அணியாக வளர்ந்த ரியல் மாட்ரிட் 4 ஆண்டு போராட்டத்தில் வெற்றி கண்ட அதிசயம்
கால்பந்து உலகின் நட்சத்திர அணியும், ஸ்பெயின் கிளப் அணியுமான ரியல் மாட்ரிட் அணி இது வரை 5 முறை பிபா கிளப் உலக்கோப்பை பட்டமும், 14 முறை ஐரோப்பிய கிளப் சாம்பியன் பட்டமும், 51 முறை லாலிகா பட்டமும் (ஸ்பெயின் லீக்), 20 முறை கோபா டெல் ரே (ஸ்பெயின் பிராந்தியம்) என பல்வேறு பட்டங்கள் வென்ற வரலாறுமிக்க அணியாகும். ஆனால் கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் கடுமையாக திக்கு திணறியது ரியல் மாட்ரிட் அணி. இதற்கு முதன்மை யான காரணம் போர்ச்சுக்கல் கேப்ட னும், அல் நாசர் (சவூதி அரேபியா) அணிக்கு விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2018இல் ரியல் மாட்ரிட் அணியை விட்டு வெளியேறியதுதான். ரொனால்டோ வெளியேறி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வலு வான அணியாக ரியல் மாட்ரிட் உரு வெடுத்து லாலிகா மற்றும் ஐரோப்பிய கிளப் அணிகளை மிரட்டி வருகிறது
இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றிய பயிற்சியாளர்
ரொனால்டோ, ஜுவன்டஸ் (இத்தாலி) கிளப்பிற்கு கிளம்பிய பொழுது ரியல் மாட்ரிட் அணியில் கடும் குழப்பும் ஏற்பட்டது. ரொனால்டோ இல்லாமல் எப்படி எதிரணியை வீழ்த்து வோம், அவர்களை எப்படி சமாளிப் போம் என வீரர்கள் சோர்வாக காணப் பட்டனர். முக்கியமாக அணியை மீட் டெடுக்கும் திறன் படைத்த பயிற்சி யாளர்களும் சொதப்ப கிட்டத்தட்ட பார்ம் பிரச்சனையை இழந்தது ரியல் மாட்ரிட். இதனால் பயிற்சியாளர்களை அடிக்கடி மாற்றியது ரியல் மாட்ரிட் நிர்வாகம். 2015 முதல் 2017 வரை ரியல் மாட்ரிட் அணியை கவனித்த கார்லோ அன்ஸிலோட்டியே (இத்தாலி) மீண்டும் பயிற்சியாளராக (2021 முதல்) நிய மிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழும், வீரர்களின் ஒத்துழைப்பாலும் தற்பொழுது மிகவும் வலுவான அணி யாக வளர்ந்துள்ளது ரியல் மாட்ரிட். ரொனால்டோ இல்லாமல் ரியல் மாட்ரிட் அணி தேறுவது கடினம் என்ற ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் சொல்லுக்கு தனது பயிற்சியின் மூலம் பதிலடி கொடுத்து, வலுவான அணியாக வளர்த்துள்ளார் கார்லோ அன்ஸிலோட்டி.
ரியல் மாட்ரிட் அணியின் தூண்கள்
நாச்சோ (கேப்டன்) - ஸ்பெயின்
லூகா மோட்ரிச் (துணை கேப்டன்) - குரோஷியா
ரோட்ரிகோ - பிரேசில்
டோனி க்ரூஸ் - ஜெர்மனி
டேவிட் அலபா - ஆஸ்திரேலியா
ஜூட் பெல்லிங்ஹாம் - இங்கிலாந்து
திபாட் கோர்டோயிஸ் - பெல்ஜியம் (கோல் கீப்பர்)
வின்சியஸ் ஜூனியர் - பிரேசில்
டானி கார்வஜல் - ஸ்பெயின்
இந்த வீரர்கள் பட்டியலில் உள்ள லூகா மோட்ரிச், ஜூட் பெல்லிங்ஹாம், வின்சியஸ் ஜூனியர், நாச்சோ, டோனி க்ரூஸ் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணி யை நட்சத்திர பாதைக்கு அழைத்து வர பயிற்சியாளர்களுடன் போராடி யவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரு ஆள் போதும்
இங்கிலாந்து கால்பந்து வீரரான ஜூட் பெல்லிங்ஹாம் (20) ரியல் மார்டிட் அணியின் முன்கள வீரராக அசத்தி வருகிறார். தனது வயதிற்கு ஏற்ப ரொனால்டோ அளவிற்கு மிரட்டலான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறார் ஜூட் பெல்லிங்ஹாம். இவர் ஒரு ஆள் போதும் ரியல் மாட்ரிட் அணிக்கு என்ற நிலையில் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் பக்கபலமாக உள்ளார்.
கரைசேராத பார்சிலோனா
ரொனால்டோ கைவிட்ட ரியல் மாட்ரிட் அணி நல்லபாதையில் பயணித்து வரும் நிலையில், மற்றொரு நட் சத்திர அணியான பார்சிலோனா (லாலிகா - ஸ்பெயின்) அணி மெஸ்ஸி சென்ற பின் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியாமல் கடுமையாக போராடி வருகிறது. அதற்கு அந்த அணியில் போதுமான அளவு நட்சத்திர வீரர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் ஆகும்.
பிரபல கால்பந்து பயிற்சியாளர் டெர்ரி வெனபிள்ஸ் காலமானார்
முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரரும், ஐரோப்பிய கால்பந்து உலகின் பிரபல பயிற்சியாளருமான டெர்ரி வெனபிள்ஸ் (80) ஞாயி றன்று (இங்கிலாந்து நேரப்படி) நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டெர்ரி வெனபிள்ஸ் இங்கிலாந்து அணிக்காக குறைந்த காலம் விளையாடினாலும் இங்கி லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியுள் ளார். முக்கியமாக கால்பந்து உலகின் நட்சத்திர கிளப் அணி யான பார்சிலோனா, டோட்டன் ஹம், லீட்ஸ் ஆகிய அணி களுக்கும் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். டெர்ரி வெனபிள்ஸ் மறைவிற்கு இங்கிலாந்து கால்பந்து சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.