FIFA Uncovered -நெட்பிளிக்ஸ் (2022)- ஆவணப்படத்தொடர்
கத்தாரில் நடந்து முடிந்த 22-ஆவது உலகக் கால்பந்தாட்டப் போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டு களித்த னர். அர்ஜெண்டினாவின் வெற்றியைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடிக் களித்தனர். உல கெங்கிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள். இந்த ஒளிவெள்ளத்தின் அடியில், உறைந்து கிடக்கும் ஊழலை, ரத்தச் சகதியை, ஆரவாரத் தால் அமுங்கிப் போன கூக்குரல்களைப் பேசும் ஆவணப்படமே “FIFA Uncovered”. “உலகக் கால் பந்தாட்ட பேரமைப்பின் முகத்திரை கிழிப்பு” என்று பொருள். Football International Federation Association என்பதன் சுருக்கமே FIFA (ஃபிபா) என்பதாகும். இதன் தலைமையகம் சுவிட்சர் லாந்தின் ஜூரிச் நகரில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெ ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஒசானியா ஆகிய கண்டங்களின் கால்பந்தாட்டக் கழகங்களின் 24 பிரதிநிதிகளே ஃபிபாவின் செயற்குழு உறுப் பினர்கள். உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடுகளை இந்த செயற்குழு தேர்ந்தெடுக்கிறது. ஃபிபாவின் உயர்நிலைக்குழு காங்கிரஸ் எனப்படும். இதுவே இறுதி முடிவெடுக்கும் அதி காரம் கொண்டது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. ஃபிபா 1904-இல் தொடங்கப்பட்டது. ஆனால் 1930 களிலிருந்தே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பைப் போட்டியை நடத்தி வருகிறது. பிரேசிலின் பெரும் தொழிலதிபரான ஜோவோ அவலாஞ்ச் தலைவரானபின் 1978-இல் உலகக்கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டியை உலகளாவிய வணிகநிறுவனங்கள் தொழில் முறையில் நடத்தும் ‘‘ஸ்பான்சரிங்’’ முறை செயற்படுத்தப்பட்டது. அதன்பின் உலகளாவிய தோழமைச் சரடு ஊடோடும் கால்பந்தாட்டம் என்ற விளையாட்டு, திரைப்படம் போல ஒரு கேளிக்கைச் சரக்காக அமைந்தது. பெரும் செலவில் கட்டமைப்பு வசதி களைச் செய்து போட்டியை நடத்தும் நாடுகள், திரையரங்க உரிமையாளர் போன்றவை ஆகும். ஆனால் அரசியல் ரீதியில் கேடுகெட்ட கொடுங்கோல் அரசுகள் உலக நாடுகளின் பார்வை யில் உத்தமத் தோற்றம் காட்டும் உத்தியாகவே இந்த உலகக் கோப்பைப் போட்டியை நடத்து கின்றன.
இதையே sports washing என்கிறது ஆவ ணப்படம். உலகில் முதன் முதலில் இந்த உத்தி யைக் கையாண்டு வெற்றி கண்டவன் இட்லர். இனவெறி அரசியலை முன்னெடுத்து ஜெர்மனி யின் அதிபரான இட்லர் 1936-இல் ஒலிம்பிக் போட்டி யை உலகம் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டித் தன் பாசிச முகத்தை உலகின் பார்வையிலிருந்து மறைத்தான். அவனைப் பாராட்டி கைதட்டிய தவறுக் காக, உலகம் இரண்டாம் உலகப்போரில் மார்பில றைந்து கொண்டு கதறியது. 1978-இல் அர்ஜெண்டினா முதன் முதலாக உலகக் கால்பந்தாட்ட கோப்பையை நடத்திய போது அங்கு ஜெனரல் விடேலாவின் பாசிச ஆட்சி நடைபெற்றது. எதிர்கருத்து நசுக்கப்பட்டது. போராளிகள் காணாமல் போனார்கள். சிறைக் கொட்டடியில் கொலை செய்யப்பட்டனர். உலகின் பல ஜனநாயக அமைப்புகள் இந்த உலகக் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்கக்கூடாது என எதிர்ப்புக்குரல் கொடுத்தன. ஆனால் அர்ஜெண் டினாவின் நவீன ‘‘ஸ்போர்ட்ஸ் வாஸிங்’’ தந்திரோ பாயத்தின் மூலம் 1978 கால்பந்தாட்ட திருவிழா எழுச்சியோடு நடந்து மரியோ கேம்ப்ஸ் தலைமையில் அர்ஜெண்டினா சாம்பியன் ஆகி அன்றைய அர்ஜெண்டினாவின் பாசிசம் உலகின் பார்வையிலிருந்து மங்கச் செய்யப்பட்டது என்பதும் வரலாறே. எனவே, உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற திரைமறைவில் ஃபிபா வுக்கும் ஆளும்வர்க்கக் கொடுங்கோன்மை அரசுக்குமான கள்ளக் கூட்டு வரலாற்றை நான்கு பகுதிகளில் சொல்லும் ஆவணப்படம்தான் ‘‘ஃபிபா அன்கவர்டு’’. “ஷெஃப் ஃப்ளாட்டரின் எழுச்சி’’ என்ற முதல் அத்தியாயத்தில், 2015 மே 27இல், ஃபிபா தலைமை யகத்தில் முக்கிய அதிகாரிகள் மற்றும் சில செயற்குழு உறுப்பினர்களை அமெரிக்கா உளவு அமைப்பான ஃஎப்பிஐ (FBI) கைது செய்யும் படலத்துடனும், ‘‘ஃபிபாவிற்கு சிகப்பு அட்டை” என்ற ஃஎப்பிஐ அதிகாரியின் சொல்லாடலுடனும் படம் ஆரம்பிக்கிறது.
ஃபிபா தலைவராக இருந்த ஸ்டான்லி ஹௌஸ், தென்னாப்பிரிக்காவின் இன வெறியை ஆதரிக்கிறார். இவரைத் தேர்தலில் வெல்ல, பிரேசிலின் பெருந்தொழிலதிபர் ஹவலாஞ்ச் இன வெறியை எதிர்க்கும் நிலையெடுக்கிறார். ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஃபிபாவில் ஓட்டு போட்டு தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும். ஆப்பிரிக்காவில் அதிக மான நாடுகள் உள்ளன. ஆப்பிரிக்காவின் வாக்கைப் பெற வேண்டுமென்றால் இனவெறியை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்து, தான் தலைவரா னால் நிரந்தரமாக தென்னாப்பிரிக்காவை ஃபிபா விலிருந்து நீக்குவேன் என்றும், ஆப்பிரிக்காவில் கால்பந்தாட்டத்தை வளர்க்க நிதி உதவி செய்வேன் என உறுதிமொழி அளிக்கிறார். அதன் அடிப்படையில் 68 வாக்குகள் பெற்று 11.6.1974-இல் தலைவராகத் தேர்வாகிறார். இவரது வருகை யின் மூலம் ஃபிஃபா முதலாளித்துவ அமைப்பாக மாறுகிறது. 1978 அர்ஜெண்டினா உலகக் கால்பந்து கோப்பையின்போது, விளையாட்டு வேறு. அரசியல் வேறு. இரண்டும் கலக்கக்கூடாது என்ற வர், பாசிச அர்ஜெண்டினா அரசை பாராட்டி மறை முகமாக அரசியல் செய்தார். ஃபிபா நிர்வாகக்குழுவில் செயல்பட்ட ஸ்விஸ் காரரான ஷெப் ஃபிளாட்டர் பெருங்காரியவாதி. இவர் எடுத்த எந்த ஒரு காரியத்தையும் முடிப்பவர். ஃபிபாவின் நிதி அபிவிருத்திக்கான மூளையாக செயல்பட ஹவலாஞ்சுடன் ஒட்டிக்கொள்கிறார். அடுத்தபடியாக ஹவலாஞ்சை முழுமையாக ஊழலுக்குள் தள்ளியவர் ஜெர்மன் அடிடாஸ் கம்பெனி உரிமையாளர் ஹார்ஸ்ட் டாஸ்லர். இவர்தான் 1982 ஸ்பெயின் உலக கால்பந்தாட்ட விழாவிற்கான மார்கெட்டிங் பேக்கேஜ் பொறுப் பாளர்.
இவர்தான் ஐஎஸ்எல் (International Sports and Leisure) என்ற நிறுவனம் மூலம் ஃபிஃபா தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக லஞ்ச மும், ஃபிஃபாவின் கோடிக்கணக்கான டாலர் இருப் ்புக்கும் காரணகர்த்தா. இதன்பின் ஹவலாஞ்ச் ஒரு பேரரசனாகவே வலம் வருகிறார். ஜெஃப் ஃபிளாட்டர் ஒரு கட்டத்தில் ஹவா லஞ்சின் நம்பிக்கைக்குரியவர் ஆக மாறுகிறார். தொடர்ந்து 1981-இல் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1998 பிரான்ஸ் உலகக் கால்பந்து கோப்பை போட்டியோடு விலகுவதாக ஹவலாஞ்ச் அறிவிக்கிறார். இதை எதிர்பார்த்த ஷெஃப் ஃப்ளாட்டர் அடுத்த தலைவருக்கு தன்னை தகவமைத்துக் கொள்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஜோக்கன்ஸனை தோற் கடிக்க, வாக்குகளுக்கு பிரவுன் கவர்களில் டாலர்களை நட்சத்திர விடுதிகளில் கொடுக்கும் நடைமுறையை உருவாக்குகிறார். ஐரோப்பா, தென்அமெரிக்காவிலேயே நடந்து கொண்டி ருந்த கால்பந்தாட்டத்தை, அதைத்தாண்டி ஆப்பிரிக்காவில், ஆசியாவில் உலகக்கோப் பையை நடத்துவதாக ஆப்பிரிக்கக் கண்ட கால் பந்தாட்ட கழகம் மற்றும் ஆசியக் கண்டத்தின் கால்பந்தாட்டக் கழகத்தலைவரான கத்தார் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பின் ஹம்மானிடம் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு மாறாக வாக்குறுதி அளிக்கிறார். அப்பகுதி வாக்கு களை கணிசமாக பெற்று வெற்றியும் பெறுகிறார். வெற்றி பெற்ற பின் கால்பந்தாட்ட விளையாட்டின் போது எதிரணியினரின் சட்டையை யாருக்கும் தெரியாமல் இழுப்பது, காலால் மிதிப்பது போல் தான் இந்த தேர்தல் பிரச்சாரம் எனத் தனது தவறை பூடகமாக ஒப்புக்கொள்கிறார் பிளாட்டர். “ஃபிபாவை ஒரு பெரிய குடும்பம் ஆக்குவதே தனது கோல்’’ எனக்கூறி தலைவராகிய ஃப்ளாட்ட ரின் வஞ்சகச் செயல்பாட்டை ‘‘வெற்றியில் ஷெஃப் ஃப்ளாட்டர்’’ என்ற இரண்டாம் அத்தியாயம் நேரடி சாட்சிகளின் களப்பேட்டியின் வாயிலாக வெளிச்சமிடுகிறது. ‘‘குருமா வைக்க கோழியே வீடு நாடி வந்தது’’ என்ற மூன்றாம் அத்தியாயத்தில், வெப்ப பிரதேச மான கத்தார் உலகக் கோப்பையை நடத்துவதற் கான உரிமத்தை எவ்வாறு தவறாகப் பெற்றது என்பதை விரிவாக விளக்குகிறது. ஷெப் ஃப்ளாட் டர் அரபு நாட்டில் உலகத் கால்பந்தாட்டத்தை விரிவுபடுத்தவே இம்முயற்சி என்கிறார். தான் எதுவும் அறியாத அப்பாவி என்றும் தான் லஞ்சம் பெறவில்லை எனவும் பேட்டியளிக்கிறார் பிளாட்டர். ஆனால், லஞ்சம் குறிப்பிட்ட செயற்குழு உறுப் பினர்களுக்குக் கொடுத்தே இப்போட்டியை அமெரிக்காவிற்கு கிடைக்காமல் கத்தார் எடுத்தது என்பதை பல முன்னாள், இந்நாள் ஃபிபா நிர்வாகி கள், முன்னணி பத்திரிகையாளர்களின் வாக்கு மூல ஆதாரத்துடன் படம் விளக்குகிறது. கத்தார் அரசால் வாங்கப்பட்டதே பிஎஸ்ஜி (PSG) என்ற பிரான்சு கால்பந்தாட்ட கிளப். கத்தார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஃபீன் தான் யுஇஃஎப்ஏ (UEFA) உள்ளிட்ட பிரான்சு கால் பந்தாட்டங்களை ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற்றுள்ளது.
இதன்மூலம் ஐரோப்பா கால்பந் தாட்ட கழகமான யுஇஃஎப்ஏ பிரதிநிதிகளிடம் செல் வாக்கைச் செலுத்தி, வாக்கை கத்தார் பெற்றதாக வும் அரிய பல உண்மைகளை அவிழ்க்கிறது. தனக்குப் போட்டியாக உருவெடுத்த ஆசியக் கால்பந்தாட்ட கழகத் தலைவரான கத்தாரின் முகமது பின் ஹம்மானை வஞ்சகமாக, ‘‘லஞ்சம் கொடுத்தார்’’ என்ற குற்றச்சாட்டை சுமத்தி ஃபிளாட்டர் மூன்றாவது முறையாக மீண்டும் தலைவராகிறார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் வட அமெரிக்கா கால்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளர் ஷக் ஃபிளாஸர். இவர் ஃபிபாவின் ஊழல் பணத்தை வயர்வழி பண மோசடி,வரி ஏய்ப்பு, மற்றும் மணி லாண்டரிங் போன்றவை மூலமாக மோசடி செய்ததாக அமெ ரிக்கா உளவு அமைப்பான ஃஎப்பிஐ இவரை மையப்படுத்தி விசாரிக்கிறது; இதன் மூலம் ஃபிபாவையும் வலைத்ததாக, மூன்றாவது அத்தி யாயம் விளக்குகிறது. “சூரியனுக்கு மிக அருகில்” என்ற நான்காவது அத்தியாயத்தில் நேபாளம், இந்தியத் தொழிலாளர் கள் கத்தார் உலகக் கால்பந்தாட்ட ஸ்டேடியம் கட்டு மானப் பணியில் ஈடுபட்டபோது ஆயிரக்கணக் கானவர்கள் இறந்தது பற்றியும், மனித உரிமை கள் மிதிக்கப்பட்டத்தையும் அலசுகிறது. ஆனால், கத்தார் அரசும், ஷெப் ஃபிளாட்டரும் இதனை மறுப்பதோடு மட்டுமின்றி நியாயப்படுத்துவதை யும் துகிலுரிக்கிறது. ஃபிபா, ஊழல் சேற்றில் மூழ்கியது என்று உலகம் அறிந்த பின்பும் ஷெப் ஃபிளாட்டர் ஐந்தாவது முறையாக தலைவராக 2015-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும், நெருங்கமுடியாத மனிதராக ஃபிளாட்டர் வலம் வந்ததையும் சோகமாக உடைக்கிறது இப்படம். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறே நாட்க ளில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார். ஃபிபா ஒழுங்கு முறை நடத்தை குழு ஷெஃப் ஃபிளாட்டர் மற்றும் மிகையில் பிளாட்டினி மீதான பண மோசடிக்காக எட்டு வருடத்திற்கு தற்காலிக பணிநீக்கம் செய்கிறது.
புதிய தலைவராக ஜியானி தேர்ந்தெடுக்கப்படு கிறார். “ஃபிபாவின் பணம் தலைவருடையது அல்ல; அது கால்பந்தாட்டத்திற்கானது’’ என்ற வாச கத்தோடு பதவியேற்கிறார். அமெரிக்க உளவு அமைப்பு ஷெப் ஃபிளாட்டரை இறுதி வரை குற்றம் சுமத்தவில்லை. குற்றம் சுமத்தப்பட்ட ஷக் ஃபிளாஸர் 2017-இல் தண்டனைக்கு முன்பே இறக்கிறார். ஸ்விஸ் கோர்ட் ஷெப் ஃபிளாட்டர் மற்றும் மிகையில் பிளாட்டினியை குற்றமற்றவர் என விடுவிக்கிறது. ஆனால், 2028 வரை ஷெப் ஃபிளாட்டர் ஃபிபாவால் தடை செய்யப்பட்டுள் ளார். 2026 உலகக் கால்பந்தாட்ட போட்டி அமெ ரிக்கா, கனடா, மெக்சிகோ நடத்துவதாக ஃபிபா காங்கிரஸ் அறிவித்துள்ளது’’ என்ற விபரங்களு டன் படம் முடிகிறது. ‘‘ஃபிபா உண்மையிலேயே சக்தி வாய்ந்தது. ஏனென்றால் அது உலகக் கோப்பை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது. ஆனால் உலகக் கோப்பையை தங்கள் நாட்டில் நடத்த முயற்சிப்பதற்காக நாடுகள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்கின்றன. உலகக்கோப்பையை நடத்துவதால் அந்நாட்டிற்கு ஒரு இமேஜ் கிடைக்கும். அவ்வளவே. வேறு எதனையும் சாதிக்க முடியாது’’ என்கிறார் டேவிட் கான், கார்டியன் பத்திரிகையாளர். இவரது கருத்து நூறு சதவீதம் சரியானது என்பதற்கு சான்றே, பல நாடுகளில் உருவாக்கப்பட்ட ஸ்டேடியங்கள் பராமரிப்பின்றி கிடப்பதாகும். ஜியானி இன்ஃபான்டினோ ஃபிபாவின் தற்போ தைய தலைவர், கத்தார் உலகத் கால்பந்தாட்ட விழா துவக்கத்தில், ‘‘பல விஷயங்களில் ஃபிபா மற்றும் கத்தாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், நியாயமற்றவை’’ எனப் பெனின்சுலா பத்திரிகை பேட்டியில் கூறினார். ஆனால் இப்படத்தில் ஃபிபா ஊழல்மயமாகி விட்டது எனக் கூப்பாடு போடும் பல நபர்களில் ஜியானி இன்ஃபான்டினோவும் ஒருவராக வருகிறார் என்பதனை இப்படம் தோலுரிக்கிறது. இம்முரணை என்னவென்று சொல்வது.
இந்நான்கு அத்தியாயம் வாயிலாக ஃபிபா வின் கோர முகத்தை, பல ஆளுமைகளை பேட்டி கண்டு, சாட்சியாக ஆவணப்படுத்தி, பதிவு செய்து உலக மனசாட்சியை விவாதத்திற்கு தூண்டியுள் ளது. இந்த ஆவணப்படம். ஃபிபாவைப் பற்றிய உயர் எண்ணம் இப்படம் பார்த்த பின்பு நொறுங்குவது உறுதி. நான்கு அத்தியாயமும் 3 மணி 7 நிமிடங்களில் பரபரப்பாக நகர்கிறது. பின்னணி இசை பார்வை யாளர்களின் கோபக்கனலை, சரிவிகிதத்தோடு கொதிநிலைக்கு கொண்டு செல்கிறது. படத்தின் எடிட்டிங் மற்றும் போட்டோகிராபி கூடுதல் பலம் சேர்க்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான டானியல் ஹோர்டனின் துணிச்சலை எழுந்து நின்று பாராட்டியே ஆகவேண்டும். மாபெரும் உலக பகாசுர அமைப்பின் மெகா ஊழலை வெளிக் கொணர்ந்ததன் மூலம் இப்பட இயக்குநர் வரலாற்றில் இடம் பெறுகிறார். ஃபிபா கால்பந்து ஊழலில் ஈடுபட்டவர்களை நெருங்கலாம். ஆனால் தொடமுடியாது. இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் காலம் ஒரு நாள் இந்த ஊழல் பந்தாளர்களை உதைத்து தண்டிக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஆவணப்படம் விதைத்துள்ளது.