games

img

கிளப் உலகக்கோப்பை கால்பந்து: இன்று 3வது இடத்திற்கான ஆட்டம்

19-வது சீசன் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அல் ஹிலால் (சவூதி - ஆசிய சாம்பியன்) -  ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியன்) அணி இறுதிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் நிலையில், அரையிறுதியில் தோல்விகண்ட அல் அக்லி (ஆப்பிரிக்க ரன்னர்) - பிளமிங்கோ (பிரேசில் - தென் அமெரிக்கா) அணிகள் மோதும் 3-வது இடத்திற்கான ஆட்டம் சனியன்று நடைபெறுகிறது. 

இன்று - 3-வது இடத்திற்கான ஆட்டம்

அல் அக்லி - பிளமிங்கோ 
நேரம் : இரவு 9 மணி
இடம் : கிராண்ட் மைதானம், மொரோக்கோ

இறுதி ஆட்டம் - ஞாயிறன்று அதிகாலை

அல் ஹிலால் -  ரியல் மாட்ரிட்
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : பிரின்ஸ் மைதானம், மொரோக்கோ

(இரண்டு ஆட்டங்களையும் பிபா+ (fifa+) சேனலில் இலவசமாக காணலாம்)

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்று 2 ஆட்டங்கள்

 இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
 

இன்றைய ஆட்டங்கள்

மேற்கு இந்தியத் தீவுகள் -  இங்கிலாந்து
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : பார்ல் மைதானம்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து

நேரம் : இரவு 10:30 மணி

இடம் : பார்ல் மைதானம்

சேனல்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (இரண்டு ஆட்டங்களும்)