games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல் 
டிசம்பர் 18 வரை

இன்றைய ஆட்டங்கள்

புதனன்று முதல் லீக் சுற்றுகளின் மூன்றாவது சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. இதுவரை 3 அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள 13 நாக் அவுட் இடங்களை நிரப்புவதற்கான லீக் சுற்றுகளின் மூன்றாவது சுற்று ஆட்டங்கள் மிக முக்கியமானது என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும்.

குரூப் “டி”

பிரான்ஸ் - துனிசியா

நேரம் : இரவு 8:30 மணி / இடம்: எஜுகேஷன் சிட்டி

குரூப் “டி”

ஆஸ்திரேலியா - டென்மார்க்

நேரம் : இரவு 8:30 மணி / இடம் : அல் ஜனுவப்

குரூப் “சி”

அர்ஜெண்டினா - போலந்து

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (வியாழனன்று அதிகாலை / இடம் :  974

குரூப் “சி”

சவூதி அரேபியா - மெக்ஸிகோ

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (வியாழனன்று அதிகாலை)  /  இடம் : லுஸைல்

பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்த போராட்டக்காரர்

போர்ச்சுக்கல்-உருகுவே ஆட்டம் கத்தார் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லுஸைல் நகர மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கணக்கில் பலமான உருகுவே அணியை வீழ்த்திய நிலையில், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பலத்த சர்வதேச பாதுகாப்பையும் மீறி “உக்ரைனை காப்பாற்றுங்கள் (Save Ukraine)”, “ஈரான் பெண்களுக்கு மரியாதை (Respect for Iranian woman)” வாசகங்கள் பொருந்திய டி-சர்ட் உடன் ஓரினச் சேர்க்கை ஆதரவு வானவில் கொடியை ஏந்தி மைதானத்தில் போட்டிக்கு இடையே ஓடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

நாக் அவுட் சுற்றில் 3 அணிகள்

லீக் சுற்றிலேயே பரபரப்பாக நடைபெற்று வரும் கத்தார் உலகக்கோப்பை தொடரில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு (செவ்வாயன்று மாலை நிலவரப்படி) முன்னேறியுள்ளன. முதல் அணியாக குரூப் “டி” பிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி முன்னேறியது. குரூப் “ஜி” பிரிவில் உள்ள பிரேசில் அணி 2-வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், குரூப் “எச்” பிரிவில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.  குரூப் “ஏ” பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார் அணியும், குரூப் “எப்” பிரிவில் உள்ள கனடா அணியும் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.
 

 

;