games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

இத்தாலியை புரட்டியெடுத்த சுவீடன்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசி லாந்து நாடுகளில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத் தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெற்ற “குரூப் ஜி” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் இத்தாலி - சுவீடன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக் கம் செலுத்திய சுவீடன் அணி 5-0 என்ற கணக்கில் இத்தா லியை புரட்டியெடுத்து கோல் மழை பொழிந்தது. ஆடவர் பிரி வில் இத்தாலி அணி நன்றாக விளையாடினாலும் மகளிர் பிரிவில் இரண்டாம் தர அணி யாக இத்தாலி உள்ளது. சுவீடன் அணி இரு பிரிவுகளி லும் முதல் தர அணியாக உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்
தென் கொரியா - மொரோக்கோ
நேரம் : காலை 10:00 மணி
Y Y Y
நார்வே - பிலிப்பைன்ஸ் 
நேரம் : மதியம் 12:30 மணி
Y Y Y
சுவிட்சர்லாந்து -நியூசிலாந்து
நேரம் : மதியம் 12:30 மணி
Y Y Y
ஜெர்மனி - கொலம்பியா
நேரம் : மதியம் 3:30 மணி

ஆச்சர்யம் அளிக்கும் சீன வீராங்கனைகளின் செயல்பாடு

வியாழனன்று “குரூப் டி” பிரிவில் நடைபெற்ற லீக்  ஆட்டத்தில் சீனா - ஹைத்தி அணிகள் மோதின. இரு நாட்டு வீராங்கனைக ளின் ஆக்ரோசமான ஆட்டத்தால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. ஹைத்தி வீராங்க னைகள் ஒருவகை மோதலை தொடுக்க, சீன வீராங்கனைகள் முரட்டு தனமாக விளையாட லீக் ஆட்டத் திலேயே தொடங்கியது யுத்தம். இந்த மோதலால் சீனா - ஹைத்தி என இருநாட்டு வீராங்கனைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சீன வீராங்கனை ஜங் மோதலை ஒருபடி மேலே கொண்டு சென்று, ஹைத்தி வீராங்கனை ஜியூ டியை காலால் உதைத்து தள்ளினார்.  இந்த சம்பவத்தில் ஹைத்தி வீராங்கனை ஜியூடி படுகாயம் அடைய, சீனாவின் ஜங்கிற்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். முழுநிமிடங்களிலும் முட்டு மோதலுமாக இருந்த இந்த ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கணக் கில் ஹைத்தியை வீழ்த்தியது.  ஆச்சர்யம் எந்த விளையாட்டாக இருந்தாலும் சீன வீரர் - வீராங்கனைகள் அதிகம் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். அப்படி கோபம் எதுவும் வந்தால் விளையாட்டில் மிக மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்துவார்கள் தவிர மோதலை கையில் எடுக்க மாட் டார்கள். ஆனால் ஹைத்தி வீராங்க னைகள் தொடக்கத்திலேயே அதிக பவுல்களை தொடுத்ததுதான் சீன வீராங்கனைகளின் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமா கவே  முரட்டுத்தனமாக மோதலுடன் விளையாடி ஹைத்தி வீராங்கனை களை துவம்சம் செய்துள்ளனர். சீன வீராங்கனைகளின் இந்த நிலைப்பாடு விளையாட்டு உலகில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்
லக்ஷயா சென் அவுட்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அந்நாட்டு தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் 21-15, 13-21, 16-21 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷயா சென் வீழ்ந்து வெளியேறினார்.