games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

இன்று ஓய்வு

மகளிர் 9-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வியாழனன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட களைப்பை போக்க வெள்ளியன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனியன்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.

புத்திக்கூர்மை...

ஆடவர் போல வேகமாக ஓட மாட்டார்கள் என்றாலும், ஓட்டத்தின் பொழுது பந்தை பொறுமையாக  நகர்த்துவதில் மகளிர் பிரிவு பெயர் பெற்றது. அதாவது செஸ் விளையாட்டு போல புத்திக்கூர்மையுடன் விளையாடி கோலடிப்பார்கள். ஆனால் சமீப காலமாக மகளிர் கால்பந்து விளையாட்டில் வீராங்கனைகளின் ஓட்டத்தின் வேகம் சற்று அதிகரித்துள்ளது.

ரசிகர்களின் ஆர்வம் அதிகரிப்பு

கடந்த காலங்களை விட நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் ஆர்வம் சற்று அதிகரித்துள்ளது. தற்பொ ழுது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் கூட கடந்த காலங்களை விட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சீண்டினால் ஆட்டம் முழுக்க சண்டைதான்

மகளிர் கால்பந்தின் ஒரு  ஆட்டத்தில் வீராங்கனைகளுக்கு இடையே  சிறிய சண்டை அரங்கேறிவிட்டால், அது  ஆட்டத்தின் அல்லது சீசன் அல்லது சில ஆண்டுகள் வரை பகைமை உணர்வுடன் சண்டை நீடிக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற சீனா - ஹைத்தி  அணி களுக்கு இடையேயான ஆட்டம்  கடும் மோதல் போக்குடன்  நடைபெற்றது.  இருநாட்டு வீராங்கனை களுக்கும் வரலாற்றுபகை இல்லை யென்றாலும், சிறிய சம்பவம் மூலம் ஆட்டம் முழுக்க சண்டை அரங்கேறியது. அதாவது  கோலடிக்க முயற்சி எடுத்ததை விட   சண்டை செய்வதற்கான முயற்சியில் சீனா -  ஹைத்தி ஆதிக்கம் செலுத்தி காயங்களுடன் நிறைய  வீராங்கனைகள் பெவிலியன்சென்றார்கள்.  இதில் சுவாரஸ்யமான விஷயம்  என்னவென்றால் ஆடவர் பிரிவில்  கூட வீரர்கள் சண்டை போட்டால் சிறிது நேரத்தில் சிரித்து நண்பர்களாக மாறிவிடுவார்கள். 

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் சிந்து

உலகின் முக்கிய பேட்மிண் டன் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா வின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து, மற்றொரு இந்திய வீராங்கனை யான ஆகார்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமெரிக்கா வின் பி.டபிள்யு.ஜாங்கை எதிர்கொள் கிறார் பி.வி.சிந்து.

பிரனோய் அபாரம்2 இந்தியர்கள் அடுத்தடுத்து 

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரனோய் சீன தைபேவின் ஒய் சீ-யை 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் மற்றொரு நட்சத்திர இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன தைபேவின் எல்.ஒய்.சு-வை 21-10, 21-17 என்ற செட்  கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். ராஜவாத் என்ற இந்திய ரான சீன தைபேவின் வாங்கை 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

 2 இந்தியர்கள் அடுத்தடுத்து தோல்வி

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒரே நாளில் 2 இந்தியர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். மஞ்சுநாத் மலேசியா வின் ஜெ.லி-யிடம் 13-21, 21-12, 19-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இந்தோனேசியாவின் கின்டிங்கிடம் 15-21, 18-21 என்ற செட் கணக்கில் ஜார்ஜ் வீழ்ந்தார்.