15-வது சீசன் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவில் (புவனேஸ்வர் - ஒடிஷா) வரும் ஜனவரி 13 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 16 நாடுகள் பங்குபெறும் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறக்குறைய 90% நிறைவு பெற்ற நிலையில், தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கும் இந்திய அணி தனது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வீரர்கள் விபரம்
கேப்டன் : ஹர்மன்ப்ரீத் (பின்களம்) துணை கேப்டன் : அமித் ரோஹிதாஸ் (பின்களம்) கோல்கீப்பர்கள் : ஸ்ரீஜேஷ் ரவீந்திரன், கிரிஷன் பகதூர் முன்களம் : மந்தீப் சிங், லலித் குமார், அபிஷேக், சுக்ஜீத் சிங் நடுகளம் : மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் பிரசாத், ஆகாஷ்தீப் சிங் பின்களம் : சுரேந்தர் குமார், ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், வருண் குமார், நீலம் சஞ்சீப் மாற்று வீரர்கள் : ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி “டி” பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளுடன் உள்ளது.