games

img

விளையாட்டு...

ஆசியக்கோப்பையில் இன்று “பாரம்பரிய யுத்தம்” தீவிர பயிற்சியுடன் களமிறங்கும் இந்தியா - பாகிஸ்தான்

16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடர் பாகிஸ்தான், இலங்கை நாட்டில் கூட்டாக நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் உலகின் பாரம்பரிய யுத்தமாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் சனியன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக இரு அணி களும் இருப்பதால் யாருக்கு வெற்றி என இருநாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், ரசிகர்களின் ஆவலுக்கு மழை குடைச்சல் ஏற்படுத்தி வருகிறது. காரணம் சனியன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் கண்டி நகரில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.  கிட்டத்தட்ட 90% மழை பெய்ய வாய்ப்புள்ள தால் இந்த ஆட்டம் சிக்கல் இல்லாமல் நடைபெறுவது சந்தேகம்தான்.

இன்று...
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : மதியம் 3:00 மணி
இடம் : பல்லேகலே மைதானம், கண்டி, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி - இலவசம்)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2023 

யுகி பாம்பரி ஜோடி அவுட்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.  வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் யுகி பாம்பரி - பிரேசிலின் மார்சிலோ ஜோடி, மொனாகோ நாட்டின் ஜேன் - ஹியூகோ ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜேன் - ஹியூகோ ஜோடியிடம் வீழ்ந்து, பாம்பரி - மார்சிலோ ஜோடி வெளியேறியது.

தெரிந்து கொள்ளுங்கள்

மறைமுக பயிற்சி

விளையாட்டு உலகில் வித்தி யாசமான பயிற்சி வழக்க முறை கொண்டவர்கள் ஜெர்மானி யர்கள். உலக விளையாட்டுப் போட்டி களில் அதாவது ஒலிம்பிக், உலக  சாம்பியன்ஷிப் போன்ற விளை யாட்டுகளில் விளையாடவுள்ள ஜெர்மனி வீரர் - வீராங்கனைகள் மற்றும் குழுவினர் இருக்கும் இடம் தெரியாமல் பயிற்சி செய்வார்கள். உலக தொடர்களின் ஆயத்தத்திற்காக வேறு உள்ளூர் தொடர்களில், சாதாரண சர்வதேச தொடர்களில் பங்கேற்க கூட மாட்டார்கள். பயிற்சி பெறும் இடத்திலேயே முகாமிட்டு இருப்பார்கள். புரியும்படி சொன்னால் காணாமல் போன மாதிரி மறைமுகமாக இருப்பார்கள். பயிற்சி பெறும் இடங்களும் ரகசிய மாக இருக்கும். ஒரு தொடரில் பங் கேற்றுவிட்டு பதக்கம் வென்றுவிட் டால் அடுத்த தொடர் வருவதற்கு முன் சிறிது காலம் வெளிப்படையாக கண்ணில் படும்படி பயிற்சி பெறு வார்கள். இல்லையென்றால் சாதிக்கும் வரை மறைமுக யுத்தப் பயிற்சிதான். ஜெர்மனியின் இந்த விளையாட்டு பயிற்சி முறையை ஸ்பெயின், சீனா, நார்வே ஆகிய நாடு களும் பின்பற்றுகின்றன. இந்தியா அப்படி அல்ல இருக்கிற எல்லா தொடர்களில் பங்கேற்ற பின்புதான் உலக தொடருக்கு தயாராகுவார்கள்.  அதுவும் நேரடியாக பயிற்சிதான்.