games

img

முதல் சுற்று ஆட்டங்களில் அணிகளின் ஆட்டத்திறன் எப்படி?

கத்தார் உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று ஆட்டங்களில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் பலமான அணிகளான ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் மிரட்டலான பார்முடன் விளையாடியது. 2-ஆம் தர அணிகளில் ஈகுவடார், ஜப்பான், சவூதி அரேபியா, வேல்ஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் நன்றாக விளையாடியது. டென்மார்க்,  துனிசியா, மெக்ஸிகோ, போலந்து, தென்கொரியா ஆகிய அணிகள் தடுப்பாட்டத்தில் கலக்கியது. அர்ஜெண்டினா, ஜெர்மனி, உருகுவே, குரோஷியா ஆகிய அணிகள் பார்ம் பிரச்சனையில் சிக்கி கடுமையாக சொதப்பியது. கனடா, கானா, செனகல், கேமரூன் அணிகள் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் கடைசி நேர சொதப்பலால் தோல்வியை தழுவியது. கடந்த காலங்களை போல் அல்லாமல் நடப்பு சீசனில் சுவிட்சர்லாந்து அணி பிரம்மாண்டமாக விளையாடி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

;