ஐரோப்பிய கால்பந்து - 2024
இறுதிக்கு முன்னேறுவது யார்?
பிரான்ஸ் - ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், செவ்வாயன்று நள்ளிரவு முதல் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கு கிறது.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியும், 3 முறை சாம்பி யன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி களும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் சரிசம அளவி லான பலத்துடன் உள்ள நிலையில், 5ஆவது முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றும் முனை ப்பில் ஸ்பெயின் அணியும், 4ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று 24 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பிரான்ஸ் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறி யாக களமிறங்குவதால் இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் - ஸ்பெயின்
நேரம் : செவ்வாயன்று நள்ளிரவு 12:30 மணி
(ஜூலை 10 அதிகாலை)
இடம் : மூனிச், ஜெர்மனி
விம்பிள்டன் டென்னிஸ் - 2024
கோகா கவுப் அவுட்
டென்னிஸ் உலகில் முதன்மையான தொடராக இருப்பது கிராண்ட்ஸ்லாம் (பரிசுத்தொகை காரணமாக) தொடர் ஆகும். தற்போது ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா என 4 விதமான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் இயற்கை புற்களுடன் நடைபெறும் ஒரே டென்னிஸ் தொடர் விம்பிள்டன் ஆகும்.
147 ஆண்டுகால பாரம்பரியமிக்க இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 137ஆவது சீசன் ஜூலை 1 அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று நடைபெற்று வருகிறது. திங்களன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் 19ஆவது இடத்தில் இருக்கும் சக நாட்டு வீராங்கனையான எம்மா நவர்ரோவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், எம்மா நவர்ரோ 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான கோகா கவுப் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள்
மகளிர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் திங்களன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், செவ்வாயன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார் (ஒடிடி))
நாளை
கோபா அமெரிக்கா - 2024
முதல் அரையிறுதி
நேரம் : புதனன்று அதிகாலை 5:30 மணி
இடம் : நியூ ஜெர்சி, அமெரிக்கா
சேனல் : பிபா ஆன்லைன்