games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அபாரம்

திங்களன்று அதிகாலை நடைபெற்ற 4-வது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இளம் அணியான செனகலை பலமான இங்கிலாந்து அணி எதிர்கொண்டது. இளம் கன்று பயமறியாது என்பது போல ஆட்டத்தின் முதல் 35 நிமிடங்களில் செனகல் அணி முன்களத்தில் கடும் தாக்குதல் நடத்தியது. இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டின் அபார ஆட்டத்தால் செனகல் அணியின் தாக்குதல் தவிடு பொடியானது.  அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் ஹாரி ஏதோ ஒரு உத்தரவை பிறப்பிக்க இங்கிலாந்து வீரர்கள் முன்கள தாக்குதலை ஆரம்பித்தனர். தாக்குதல் ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் அனல் பறந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஹெண்டர்சன் 38-வது நிமிடத்தில் கோலடித்தார். முதல் பாதியின் உதிரி நிமிடங்களில் (45+3’) இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி அதிரடி கோலடிக்க 2002 கனவில் இருந்த செனகல் அதிர்ச்சியில் உறைந்தது.  இரண்டாம் பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாகா தந்திரமாக கோலடிக்க செனகல் வீரர்கள் சற்று சோர்ந்தனர். அடுத்து 70-வது நிமிடத்திற்கு பிறகு செனகல் அணி மீண்டும் தாக்குதல் மூலம் கோலடிக்க முயற்சி செய்தது. ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்'

நெதர்லாந்து, அர்ஜெண்டினா, 
பிரான்ஸ், இங்கிலாந்து
நாக் அவுட் ஆன அணிகள்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, 
போலந்து, செனகல்
இன்றுடன் நாக் அவுட் நிறைவு

தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்து வரும் 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் செவ்வாயன்று (கடைசி நாக் அவுட் ஆட்டம் புதன்கிழமை விடிவதற்குள் முடிந்துவிடும்) நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. அதன் பின் டிசம்பர் 9-ஆம் தேதி காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது.

இதுவரை 2 ரெட் கார்டுகள் மட்டுமே

கத்தார் உலகக்கோப்பை சீனில் நாக் அவுட் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை 2 ரெட் கார்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்களில் வேல்ஸ் கீப்பர் வெயின் மற்றும் கோலடித்த மகிழ்ச்சியில் ஜெர்சியை கழற்றிய கேமரூன் வீரர் வின்சன்ட் ஆகியோர் ரெட் கார்டு பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினர். இதுபோக 2 மஞ்சள் அட்டை பெற்று ஒரு போட்டியில் பெஞ்சில் அமர்ந்தவர்களும் கணக்கில்லாமல் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தனது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிரான்ஸ் அணி தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் போலந்து அணியை  3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அனைவருக்கும் கல்வி வேண்டும்... 

ஒரே ஒரு பேண்ட் மூலம் கவனம் ஈர்த்த மெஸ்ஸி...

கால்பந்து உலகின் நட்சத் திர வீரரும், அதிக ரசிகர் களை கொண்ட வீரருமான மெஸ்ஸி 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணியை திறம்பட வழி நடத்தி வருகிறார். கடந்த கால உலகக் கோப்பை போன்று அல்லாமல் நடப்பு சீச னில் சற்று சூப்பர் பார்மில் அதிரடி கோல்  களுடன் அமர்க்களப்படுத்தி வருகிறார் மெஸ்ஸி. மெஸ்ஸியின் கேப்டன்ஷிப் மற்றும் தந்திரமான கோல்களின் உதவி யால் அர்ஜெண்டினா அணி காலிறு திக்கு முன்னேறி அசத்தியுள்ளது.  இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான நாக் அவுட் சுற்று ஆட்  டத்தில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறு திக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி EDUCATION FOR ALL (அனை வருக்கும் கல்வி வேண்டும்) என்ற பேண்டை அணிந்து (கேப்டன் பேண்ட்) விளையாடினார். மெஸ்ஸியின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கள் குவிந்து வருகிறது. நாடு, விளையாட்டு, அரசியல் என எவ்வித பாகுபாடின்றி மெஸ்ஸியின் கல்விக்கான “சேவை தகவல்” திறனை பாராட்டி வாழ்த்துக்கள், மீம்ஸ்கள் என  பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மெஸ்ஸி சமூக வலைத்தளங்களில் டாப்  டிரெண்டிங்கில் உள்ளார்.

இன்றைய நாக் அவுட் ஆட்டங்கள்

மொரோக்கோ - ஸ்பெயின் 

நேரம் : இரவு 8:30 மணி
இடம் : எஜுகேஷன் சிட்டி

இரு அணிகளின் பொதுவான பலம், பலவீனம் அடிப்படையில் கணித்தால் ஸ்பெயின் அணி எளிதாக காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடப்பு உலகக்கோப்பை சீசனில் கணிக்க முடியாத அணியாக இருக்கும் மொரோக்கோ குரூப் (எப்) சாம்பியன் அந்தஸ்தில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னே றிய அனுபவத்தில் உள்ளது. இதனால்  ஸ்பெயின் அணி கவனமாக விளையாடி னால்தான் காலிறுதிக்குச் செல்ல முடியும். லீக் ஆட்டங்களை போல மொரோக்கோ அதிரடியாக விளையாடினால் அந்த அணிக் கும் காலிறுதி வாய்ப்பு 65% உள்ளது.

போர்ச்சுக்கல் - சுவிட்சர்லாந்து 

நேரம்: நள்ளிரவு 12:30 மணி
இடம் : லுஸைல்

இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, தோல்வி என உறுதியாக கூற முடியாது. எனினும் பலம், பார்ம், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கேப்டன்ஷிப் ஆகியவற்றை கணக்கிடும் பொழுது போர்ச்சுக்கல் அணிக்கு காலிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிதான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்து அணி கடும் போராட்டத்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது என்பதால் அந்த அணியை ஜாக்கிரதையாக எதிர் கொண்டால் போர்ச்சுக்கல் நாக் அவுட் ஆகாமல் காலிறுதிக்கு முன்னேறலாம்.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா