games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

நாக் அவுட்டில் அர்ஜெண்டினா 

2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் இளம் அணியான சவூதியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் கடுமையான விமர்சனத்தை  எதிர்கொண்ட அர்ஜெண்டினா தீவிர பயிற்சியில் களமிறங்கி 2-வது லீக் ஆட்டத்தில் மெக்ஸிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற கட்டாய வெற்றி சிக்கலில் அர்ஜெண்டினா தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அனைத்து பிரிவுகளிலும் தாக்குதல் பாணியை தொடங்கிய அர்ஜெண்டினா ஆட்டத்தின் 74% நேரங்களில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து அசத்தியது. முதல் பாதியில் போலந்து அணி தடுப்பாட்டம் மற்றும் அந்த அணியின் கோல் கீப்பர் ஸ்செஜ்யென்சியின் அதிரடியால் அர்ஜெண்டினாவால் கோலடிக்க முடியவில்லை. 2-ஆம் பாதியில் அர்ஜெண்டினா சற்று கூடுதல் வியூகத்துடன் களமிறங்கி 46-வது (அல்லிஸ்டர்) மற்றும் 67-வது (ஆல்வரேஜ்) ஆகியோரின் அசத்தல் கோலால் 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. போலந்து அணி தோல்விகண்டாலும் புள்ளி போலந்து அணி நாக் அவுட் சுற்றில் வெற்றி  பெற்றது.

கீப்பர் என்றால் இப்படி இருக்க வேண்டும்...

அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது ஒரு முக்கியமான விசயம் என்றால் அதை  விட சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் அர்ஜெண்டினா - போலந்து ஆட்டத்தில் நிகழ்ந்தது.  அது யாதெனில் தொடக்கம் முதலே களத்தில் பம்பரமாக சுழன்ற அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் 3-வது நிமிடத்தின் முதலே  கோல் தாக்குதலை நடத்தியது. கிட்டத்தட்ட 20 கோல் ஷாட்களையும், 4 அதிரடி ஷாட்களை தொடுத்தது.  இதுபோக கார்னர் என பல கோல் வாய்ப்பு களை உருவாக்கியது அர்ஜெண்டினா. ஆனால் இதையெல்லாம் சுவர் போல தடுத்து  அர்ஜெண்டினா அணியை தனி ஒருவராக திணற வைத்தார் போலந்து கோல் கீப்பர்  ஸ்செஜ்யென்சி. இந்த ஆட்டத்தில் ஸ்செஜ்யென்சி சொதப்பி இருந்தால் அர்ஜெண்டினா 12 கோல்களுக்கு மேலும் விளாசி இருக்கும். ஆனால் ஒரு துளி வாய்ப்பு கூட வழங்காமல் அர்ஜெண்டினா வீரர்களை விழிபிதுங்க வைத்தார். இதுபோக மெஸ்ஸியின் பெனால்டி  வாய்ப்பையும் தடுத்து மைதானத்தை அதிர வைத்தார். நட்சத்திர கோல் கீப்பர்களில் ஜெர்மனி கோல் கீப்பர் இம்மானுவேலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஸ்செஜ்யென்சியை கால்பந்து உலகின் சுவர் அழைப்பார்கள். இவர் விளையாடும் ஆட்டங்களில் கோல் அடிப்பது மிகவும் சிரமமான விஷயம் ஆகும். களத்தில் எப்பொழுதும் கூலாக இருக்கும் ஸ்செஜ்யென்சி கிளப்  போட்டிகளில் பிரபல அணியான ஜூவண்டஸ் (இத்தாலி) அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு

சனியன்று அதிகாலை உடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. 24 மணி நேர இடைவெளி கூட இல்லாமல் சனியன்று இரவே நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கு கின்றன. 

இக்கட்டான சூழ்நிலையில் அர்ஜெண்டினா அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்த அல்லிஸ்டர்.

28 ஆண்டுகளுக்கு பின் மெக்ஸிகோ அவுட்

கால்பந்து உலகில் முன்களம்தான் முதல் களம். முன்களத்தில் கோலடித்து வெற்றி பெறுவது கால்பந்தின் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். ஆனால் தடுப்பாட்டம் மூலம் வெற்றியோ அல்லது ஒரு தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவதோ சாதாரண விஷயம் இல்லை. ஆனால் மெக்ஸிகோ அணி தடுப்பாட்டத்தின் ஒரே திறனால் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிநாக் அவுட், காலிறுதி வரை கம்பீரமாக செல்வது வழக்கம். குறிப்பாக தடுப்பாட்டம் என்றால் மெக்ஸிகோ நாட்டின் பெயர் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும் அளவிற்கு மெக்ஸிகோ தடுப்பாட்டத்தில் புகழ்பெற்றது. நடப்பு சீசனிலும் இதே முறையில்தான் களமிறங்கியது. ஆனால் போலந்தின் அபாரமான ஆட்டம் மற்றும் முதல் 2 ஆட்டங்களில் கோலடிக்காமல் கடைசி ஆட்டத்தில் மட்டும் கோலடித்து (கடைசி ஆட்டத்தில் சவூதிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி) 22-வது சீசனில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் சொதப்பியது. உலகக்கோப்பை தொடரில் 28 ஆண்டுகளுக்கு பின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடையை கட்டும் மெக்ஸிகோ கடைசியாக 1978-ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெற்ற தொடரில் உலகக்கோப்பையின் குரூப்  சுற்றில் மெக்சிகோ வெளியேறியது. அதன் பிறகு உலகக் கோப்பையில் நாக் அவுட், காலிறுதி என கம்பீரமாக வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

குரூப் “எச்”

போர்ச்சுக்கல் - தென் கொரியா

நேரம் : இரவு 8:30 மணி
இடம் : எஜுகேஷன் சிட்டி

குரூப் “எச்”

உருகுவே - கானா

நேரம் : இரவு 8:30 மணி
இடம் : அல் ஜனுவப்

குரூப் “ஜி”

செர்பியா - சுவிட்சர்லாந்து

நேரம் : நள்ளிரவு 12:30 மணி
(சனியன்று அதிகாலை)
இடம் : 974

குரூப் “ஜி”

பிரேசில் - கேமரூன்

நேரம் : நள்ளிரவு 12:30 மணி
(சனியன்று அதிகாலை)
இடம் : லுஸைல்

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குரூப் “ஏ” - நெதர்லாந்து, செனகல்
குரூப் “பி” - இங்கிலாந்து, அமெரிக்கா
குரூப் “சி” - அர்ஜெண்டினா, போலந்து 
குரூப் “டி”  - பிரான்ஸ், ஆஸ்திரேலியா
குரூப் “ஜி” - பிரேசில்
குரூப் “எச்” - போர்ச்சுக்கல்

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 10 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

;