games

img

பிளமிங்கோ அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அல் ஹிலால்

ஆப்பிரிக்க நாடான மொரோ க்கோவில் நடைபெற்று வரும் 19-வது சீசன் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புத னன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அல் ஹிலால் (ஆசியா) - பிளமிங்கோ (தென் அமெரிக்கா) அணி கள்  மோதின. ஆட்டத்திறன் மற்றும் அனு பவத்தில் பிளமிங்கோ சற்று சீனியர்  என்பதால் அல் ஹிலால் அணியை எளி தாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பு எல்லாம் தலைகீழாக மாறியது.  4-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல் ஹிலால் அணி 3-2 என்ற கணக்கில் பிள மிங்கோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. சவூதி அரேபியாவின் கிளப் அணி யான அல் ஹிலால் பெரிய அளவில்  நட்சத்திர வீரர்கள் இல்லாத அணி யாகும். ஆனால் உலகத் தரம் வாய்ந்த  பலர் உள்ள பிரேசிலின் பிளமிங் கோவை வீழ்த்தி அல் ஹிலால் இறுதிக்கு முன்னேறியுள்ளது கிளப் கால்பந்து உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

;