வெளியேறிய அமெரிக்கா : கண்ணீரில் நனைந்த மெல்போர்ன்
ஆடவர் கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளதோ, அதே போல மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் அமெரிக்காவிற்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. காரணம் வீராங்கனைகளின் ஒற்றுமையான ஆட்டம், அதிரடி, ஆக்ரோஷம், புத்திகூர்மை என பல்வேறு சிறப்புகளுடன் விளையாடுவதால் மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் அமெரிக்கா 4 முறை (1991,1999,2015,2019) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் நடப்பு சாம்பியன் மற்றும் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற நாடு என்ற சிறப்பு பெருமை உடைய அமெரிக்கா, தற்போதைய 9-வது சீசனின் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மற்றொரு சாம்பியன் அணியான சுவீடனிடம் பெனால்டி சூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து வெளியேறியது. அமெரிக்கா நடப்பு சாம்பியன் அந்தஸ்து என்பதால் 9-வது சீசனில் கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்ற ஆவலுடன் அமெரிக்க ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆஸ்திரேலியாவில் குவிந்து இருந்தனர். ஆனால் நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறியதால், போட்டி நடைபெற்ற மைதானத்திலேயே அமெரிக்க வீராங்கனைகள், அந்நாட்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் நாக் அவுட் சுற்று ஆட்டம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர மைதானம் கண்ணீர்த் துளிகளால் நனைந்தது.
காலிறுதியில் இங்கிலாந்து
திங்களன்று நடைபெற்ற 5-வது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து நாடு நைஜீரியா நாட்டை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர (90 நிமிடம்) முடிவு வரை கோலடிக்கவில்லை என்பதால் கூடுதல் நேரம் (30 நிமிடம்) வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோலடிக்காமல் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு
9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. கடைசி கட்ட நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் கொலம்பியா - ஜமைக்கா, பிரான்ஸ் - மொரோக்கோ ஆகிய அணிகள் மோதும் நிலையில், ஆகஸ்ட் 11 அன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
நாக் அவுட் சுற்று என்றால் வெளியேற்றுதல் சுற்று ஆகும்
கொலம்பியா - ஜமைக்கா
நேரம் : மதியம் 1:30 மணி
இடம்: ரெக்டாங்குலர் மைதானம், மெல்போர்ன் (ஆஸி.,)
பிரான்ஸ் - மொரோக்கோ
நேரம் : மாலை 4:30 மணி
இடம் : ஹின்ட்மார்ஸ் மைதானம், தெற்கு ஆஸ்திரேலியா
ஆசியக்கோப்பை ஹாக்கி 2023
ஆசியக்கோப்பை ஹாக்கி 2023
இன்று விடுமுறை
புதனன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன