குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்பொழுது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், 7-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டங்கள்
இடம் : சவாய் மான்சிங் மைதானம்,
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை,
சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
ஜெய்ப்பூர் - புனே
(69-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
உத்தரப்பிரதேசம் - பெங்கால்
(70-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
கபடியிலும் தமிழ்நாடு தான் டாப்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்களுக்கு மைதானம் மட்டுமின்றி ஒடிடி-யிலும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளிப்பது வழக்கம். அதாவது ஒடிடி-யில் (ஹாட் ஸ்டார்) மற்ற அணிகளின் ஆட்டத்தை 50 லட்சம் பேர் கண்டு ரசித்தால் சென்னை அணி விளையாடும் ஆட்டங்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள். இதனால்தான் ஐபிஎல் தொடரில் சென்னை அணி அதிக மவுசு உடன் உள்ளது. ஐபிஎல் தொடரைப் போல புரோ கபடி தொடரையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஒடிடியில் ஒளிபரப்பு செய்து வரும் நிலையில், மற்ற அணிகளின் ஆட்டத்தை தோராயமாக 7 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து வரும் நிலையில், தமிழ்நாடு அணி விளையாடும் ஆட்டங்களை மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடரின் சென்னை அணியை போல புரோ கபடி தொடரில் தமிழ்நாடு (தமிழ் தலைவாஸ்) அணியும் டாப் ஆர்டரில் உள்ளது.