games

img

விளையாட்டு - புரோ கபடி 2023

இன்று முதல் நொய்டாவில் 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் நடுகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கடந்த வார காலமாக  தமிழ்நாடு தலைநகர் சென்னையில் 4-ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. இந்நிலையில், 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் வெள்ளியன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் தொடங்குகிறது. நொய்டாவில் மொத்தம் 11  ஆட்டங்கள் நடைபெறுகிறது. சொந்த மண் என்பதால் உத்தரப்பிரதேசம் அணி (உ.பி. யோதாஸ்) 4 ஆட்டங்களில் விளையாட உள்ளது. 

புரோ கபடி 2023
இன்றைய ஆட்டங்கள்

பாட்னா - ஹரியானா
(45-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

உத்தரப்பிரதேசம் - பெங்களூரு
(46-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி