புரோ கபடி 2023
10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தற்பொழுது 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் மட்டும் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் புனே - பாட்னா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டங்கள்
புனே - பாட்னா
(42-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
இடம் : நேரு மைதானம் (எஸ்டிஏடி), சென்னை
(பெரியமேடு), தமிழ்நாடு.
நேரடி முகவரி : ராஜாமுத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு (சென்னை சென்ட்ரல்), சென்னை - 600003.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
டிக்கெட்டுகள் பெற...
புரோ கபடி லீக் டிக்கெட்டுகள் பெற புக் மை ஷோ (BOOK MY SHOW) தளத்தில் பெறலாம். டிக்கெட்டுகள் பெற லிங்க் : https://in.bookmyshow.com/ (டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது)
தெலுங்கு டைட்டன்ஸ் இனி பார்முக்கு திரும்பும்
இந்திய கபடி அணியின் கேப்டன் பவன் செராவத் நடப்பு சீசன் புரோ கபடி தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் போதுமான அளவு நட்சத்திர வீரர்கள் இல்லாமையாலும், பவன் செராவத் முன்பு விளை யாட முடியாமல் திணறி வருவதாலும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் நடப்பு சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கதி அவ்வளவு தான் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடைசி 2 லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் தோல்வி கண்டாலும் ஆட்டத்திறனில் போதுமான அளவு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், ஞாயிறன்று பெங்களூரு அணியிடம் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இதே பாணியில் தொடர்ந்து விளையாடினால் விரைவில் தெலுங்கு டைட்டன்ஸ் டாப் ஆர்டருக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான “பாக்சிங் டே” டெஸ்ட்
இன்று தொடக்கம்
டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. டி-20, ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், சுற்றுப்பய ணத்தின் கடைசி நிகழ்வான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செவ்வாயன்று தொடங்குகிறது. “பாக்சிங் டே” என்ற பெயரில் நடை பெறும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : சூப்பர் ஸ்போர்ட் பார்க்,
செஞ்சுரியன், தென் ஆப்பிரிக்கா
நேரம் : மதியம் 1:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி (இலவசம் இல்லை)
மேலும் ஒரு “பாக்சிங் டே” போட்டி
கிரிக்கெட் உலகில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் “பாக்சிங் டே” போட்டிகள் என அழைக்கப் படும் என்ற நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியில் விளை யாட உள்ளன. மற்ற நாடுகளில் நடைபெறும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியை விட ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
இடம் : மெர்ல்போர்ன், ஆஸ்திரேலியா
நேரம் : அதிகாலை 5:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி (இலவசம் இல்லை)