games

img

விளையாட்டு - புரோ கபடி லீக் 2023 மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்குமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி லீக் 2023
மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்குமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் தொடரில் தற்பொழுது 2-ஆவது கட்ட லீக் ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடை பெற்று வருகிறது. நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் புதனன்று நடைபெறும் தனது 3-ஆவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் தில்லி அணியை வீழ்த்திய  தமிழ் தலைவாஸ் அணி, 2-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது. இந்நிலையில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி தீவிர பயிற்சி யில் களமிறங்குகிறது. நட்சத்திர வீரர் பவன் செராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 3 தோல்வி யை சந்தித்து கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்
(21-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பாந்தர்ஸ்
(22-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குனர் ஹபீஸின் கருத்து தேவையில்லாதது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வியாழனன்று தொடங்கவுள்ள நிலையில், கடந்த வாரம் பிரதமர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த ஆட்டம் டிரா ஆன நிலையில், பாகிஸ்தான் இயக்குனர் முகமது ஹபீஸ் பயிற்சி ஆட்ட ஆடுகளம் குறித்து தேவையில்லாத கருத்துக் களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகை யில், “கான்பெரா பிட்ச் ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு அணி விளையாடியதிலேயே மிகவும் மெதுவான பிட்ச். நாங்கள் விரும்பும் பிட்ச் இங்கே கிடைக்காது என்பதை அறிவோம். எனவே அதை மீண்டும் மீண்டும் பேசி ஆஸ்திரேலிய வாரியத்திற்கு எதிராக பிரச்சனையை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இது போன்ற ஏற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்காததால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இது அவர்களின் திட்டமாக இருக்கலாம்” எனக் கூறினார். சர்வதேச ஆட்ட முடிவில் ஆடுகள திறனை விமர்சிக்கலாம். ஆனால் சாதாரண பயிற்சி ஆட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆடுகளத்தை விமர்சிப்பது நல்லதல்ல. இதில் நகைச்சுவை யான விஷயம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கான்பெராவில் எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.