games

புரோ கபடி முன்னிலை பெறுமா தமிழ்நாடு? இன்று பலமான பாட்னாவுடன் மோதல்

கொரோனா பதற்றத்துக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் தற்போது இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. பெங்களூரு, தில்லி, ஹரியானா, மும்பை ஆகிய அணிகள் முதல் 4 இடத்தில் உள்ள நிலையில், தொடக்கத்தில் அசத்தலாக விளையாடி வந்த தமிழ்நாடு அணி தற்போது பார்ம் பிரச்சனையில் சிக்கியுள்ளது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு அணி 3 வெற்றி, 3 தோல்வி, 6 டை என 34 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தனது 13-வது லீக் ஆட்டத்தில் பாட்னாவை எதிர்கொள்கிறது தமிழ்நாடு. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர் பார்ம் பிரச்சனைக்கு தமிழ்நாடு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;