games

img

விளையாட்டு - பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து வாசகங்கள், கருப்பு பட்டையுடன் விளையாடிய ஆஸி.,கிரிக்கெட் வீரர்

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து வாசகங்கள், கருப்பு பட்டையுடன் விளையாடிய ஆஸி.,கிரிக்கெட் வீரர்

“அனைத்து உயிர்களும் சமம்” என்று கூறியது தவறா?

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் மறைமுகமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் காவஜா “எல்லா உயிர்களும் சமம் (ALL LIVES ARE EQUAL)” என்ற வாசகம் அச்சடித்த காலணியை (ஷூ) அணிந்து பயிற்சி மேற்கொண்டார். இதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) “எல்லா உயிர்களும் சமம் (ALL LIVES ARE EQUAL)” என்ற வாசகம் அரசியல் சார்ந்தது என்பதால், வேறு காலணி (ஷூ) அணிந்து விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பி னரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வீடியோ மூலம் உஸ்மான் காவஜா ஐசிசி-க்கு பதிலளித்தார். அதில்,”எல்லா உயிர்களும் சமம் (ALL LIVES ARE EQUAL)” என நான் கூறி யதில் எந்த தவறும் இல்லை. அரசியல் சார்ந்தது அல்ல. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், யூதர் என எந்த  மதத்தைச் சேர்ந்தவர் உயிர் என்றாலும், அது ஒன்று தான் எனக் கூறியுள்ளேன். ஆனால் நான் செய்தது எனக் கூறும் நபர்கள் மிகப்பெரிய தவறை செய்கின்ற னர்” என கூறினார்.  எனினும் ஐசிசியின் உத்தரவை அணிந்து உஸ்மான் காவஜா வேறு கால ணியுடன் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் களமிறங்கினார்.

கருப்பு பட்டையுடன் விளையாடிய உஸ்மான் காவஜா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாட ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் வியாழனன்று பெர்த்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற  அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னரின் (164) அபார ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி யின் தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் காவஜா “எல்லா உயிர்களும் சமம் (ALL LIVES ARE EQUAL)” என்ற வாச கம் அச்சடித்த காலணியை (ஷூ) அணிந்து விளையாட ஐசிசி விளையாட மறுப்பு தெரி வித்ததற்காகவும், பாலஸ்தீன மக்களுக்காக வும், தனது கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடி மறைமுக போராட்டத் தில் ஈடுபட்டுள்ளார். உஸ்மான் காவஜாவின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாரா ட்டுக்கள் குவிந்து வருகிறது. கருப்புப்பட்டை அணிந்து விளையாடிய உஸ்மான் காவஜா ஆஸ்திரேலியா வாழ் பாகிஸ்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் புனேயில் லீக் ஆட்டங்கள்

புரோ கபடி 2023

10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடர் 12 கட்டமாக 12 நகரில் நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு கட்ட ஆட்டங்கள் குஜராத், கர்நாடகாவில் நடைபெற்ற நிலையில், 3-வது கட்ட ஆட்டம் வெள்ளியன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தொடங்குகிறது. புனேயில் மொத்தம் 11 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், சொந்த மண் என்பதால் அதிகப்பட்சமாக புனேரி பால்டன் அணி 4 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இன்றைய ஆட்டங்கள்

யு மும்பா - பாட்னா பைரேட்ஸ்
(23-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

இரண்டு ஆட்டங்களும் : பலேவாடி கம்பளக்ஸ், புனே, மகாராஷ்டிரா

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)

புனேரி பால்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ்
(24-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி