games

img

விளையாட்டு செய்திகள்

அடிலெய்டு டென்னிஸ் 2024

இறுதியில் போபண்ணா ஜோடி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முன்னணி சர்வதேச டென்னிஸ் தொடரான அடிலெய்டு டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட் டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்தி ரேலியாவின் எப்டன் ஜோடி, கஜகஸ்தா னின் அலெக்ஸாண்டர் - ஈகுவடாரின் கோன்ஜலோவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.  இந்திய நேரப்படி சனியன்று காலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போபண்ணா ஜோடி அமெரிக்க வாழ் இந்தியரான ராஜீவ் ராம் - பிரிட்டனின் சலிஸ்பரி ஜோடியை எதிர்கொள்கிறது. 

அதிர்ஷ்டம் என்றால் இப்படி இருக்க வேண்டும்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் லாரா காயம் காரணமாக வெளியேற ரஷ்யாவின் கசட்கினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான பெகுலாவை கசட்கினா எதிர்கொண்டார். அரையிறுதி ஆட்டத்தில் பெகுலா காயம் காரணமாக வெளியேற மீண்டும் அதிர்ஷ்ட வாய்ப்புடன் ரஷ்யாவின் கசட்கினா இறுதிக்கு முன்னேறிய நிலையில்,  இறுதி ஆட்டத்தில் லாத்வியாவின் ஒஸ்டாபென்காவை எதிர்கொள்கிறார் கசட்கினா.

முன்னதாக தனது அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அலெக்ஸ்சான்ட்ராவை 6-2, 1-6 (7-3) என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒஸ்டாபென்கா இறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராப்பர் - ஜிரி
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் பிரிட்டனின் டிராப்பர், கஜகஸ்தானின் பப்ளிக்கை 7-6 (7-2),  6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இதேபோல செக்குடியரசின் ஜிரி, அமெரிக்காவின் கோட்ராவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னே றிய நிலையில், சனியன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டிராப்பர் - ஜிரி கோப்பை க்கு பலப்பரீட்சை நடத்துகின்றனர்.