games

img

விளையாட்டு செய்திகள்

சென்னை
ஐஎஸ்பிஎல் கிரிக்கெட்
தமிழ்நாடு அணியை வாங்கினார் சூர்யா

புற்கள் இல்லாத சாதாரண மண் தரை  மைதானங்களில் விளையாடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி பிரபலமானது ஆகும். 

இதனை தெருவோர கிரிக்கெட் போட்டி எனவும் அழைக்கப்படும் நிலையில், ஐபிஎல் தொடரைப் போல தெருவோர கிரிக்கெட்டுக்கும் பிரிமீயர் லீக் தொடர் அடுத்தாண்டு முதல் நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் தமிழ்நாடு (சென்னை), மகாராஷ்டிரா (மும்பை), தெலுங்கானா (ஹைதராபாத்), கர்நாடகா (பெங்களூரு), மேற்கு வங்கம்  (கொல்கத்தா), ஜம்மு - காஷ்மீர் (ஸ்ரீநகர்) ஆகிய 6 அணிகளின் பெயர்கள் அறி விக்கப்பட்டு இருந்த நிலையில், 6 அணி களையும் வாங்கிய உரிமையாளர்கள் பட்டியல் புதனன்று வெளியானது. 

இதில் தமிழ்நாடு அணியை திரைக்கலைஞர் சூர்யா சிவகுமார் வாங்கியுள்ளார்.

மற்ற அணிகளின் உரிமையாளர்கள்

மகாராஷ்டிரா (மும்பை) - திரைக்கலைஞர் அமிதாப் பச்சன்
தெலுங்கானா (ஹைதராபாத்)- திரைக்கலைஞர் ராம் சரண்
கர்நாடகா (பெங்களூரு)-திரைக்கலைஞர் ஹிருத்திக் ரோஷன்
ஜம்மு - காஷ்மீர் (ஸ்ரீநகர்) - அக் ஷய் குமார்
மேற்கு வங்கம் (கொல்கத்தா) - உரிமையாளர் தகவல் முழுமையாக தெரியவில்லை

8 நாட்கள் மட்டுமே...
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை  8 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. 

ரூ.1 கோடி...
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளர்கள் 6 பேர் இருக்கலாம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் ஒரு வருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.

ஐஎஸ்பிஎல் நிர்வாகமும் பாஜக கையில்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐஎஸ்பிஎல் நிர்வாகத்தின் முதன்மை பொறுப்பாளராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) பொருளாளராக இருக்கும் ஆஷிஷ் ஷெலார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ-வும், மும்பை பகுதியின் முக்கிய பாஜக பொறுப்பாளராகவும் உள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய கிரிக்கெட்டில் செல்வாக்கு மிக்கவராக உருவெடுத்துள்ளார்.

புரோ கபடி 2023 : இன்று விடுமுறை

புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் வெள்ளியன்று தொடங்குகிறது. வீரர்கள் இடம்பெயர்வு மற்றும் இதர காரணங்களுக்காக வியாழனன்று புரோ கபடி தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு ஆட்டம்தான்
5-ஆம் கட்ட லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஒரே ஒரு  ஆட்டத்தில் மட்டுமே விளையாடுகிறது. டிசம்பர் 31 அன்று பெங்களூரு அணியை தமிழ்நாடு அணி எதிர்கொள்கிறது.