காயத்திலிருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடைபெறவுள்ளது. இதில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 29 ஆம் தேதி கானாவை சந்திக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானவர்கள் அப்படியே இந்த போட்டியில் தொடருகிறார்கள்.
கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
இந்திய அணி:
சவிதா (கேப்டன்), ரஜனி எதிமர்பு (கோல்கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா (பின்களம்), நிஷா, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி (நடுகளம்), வந்தனா கட்டாரியா, லாம்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், ஷர்மிளா தேவி, சங்கீதா குமாரி (முன்களம்).