games

img

கருப்புத் தங்கமும் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும்

4 அடி 8 அங்குலம் உயரமே கொண்டவர். உருவத்தில் மெலிந்த தேகம். ஆனாலும் தங்கப்பதக்கம் வென்று கொண்டே இருக்க வேண்டும். சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அந்த தங்க மங்கையின் விருப்பம். 

சரித்திரம்...

உலக ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. அதனை தனது 22வது வயதில் முறியடித்து 25 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தவர்.  ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாகசத்தை காட்டி மெய்சிலிர்க்க வைத்து மகுடம் சூடிய அந்த வீர  மங்கை சிமோன் பைல்ஸ்.  ஆப்பிரிக்கா-அமெரிக்கா வீராங்கனையான இவர், விளையாட்டு உலகில் நுழைந்ததில் இருந்து தாய் நாட்டுக்காக தனது ஒப்பற்ற திறமை, ஆற்றலால் பதக்கங்களை குவித்து இமயத்தின் உச்சியை அடைந்தவர்.  ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் புதிய புதிய வரலாறு படைக்கும் இவர், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநி லத்தை சார்ந்தவர். 1997 மார்ச் 14 ஆம் தேதி ஒஹியோ  கொலம்பஸ் பகுதியில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் அதிகம் கொண்டவர். 

ஆதிக்கம்...

தனது 16வது வயதில் சர்வதேச அளவில் ஜிம்னாஸ்டிக் உலகில் அறிமுகமானார். அன்று முதல் தேசிய உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் போட்டி கள் அனைத்திலும் தங்கப் பதக்கங்களை குவித்திருக் கிறார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கம், ஒரு வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த சிமோன் பைல்ஸ். 

புதிய பரிணாமம்...

ஜிம்னாஸ்டிக் உலகின் தன்னிகரற்ற வீராங்கனை யாக வலம் வந்த இவர், அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லேரி நாசரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபட்டதாக  மூன்றாண்டுகளுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களையும் பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், நாசரால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் இதற்கு முன்பு புகார் தெரிவித்தும் அமெரிக்கா அர சாங்கமும் ஜிம்னாஸ்டிக் கழகமும் அதை ஒரு  பொருட்டாகவே மதிக்கவில்லை. புகார் தெரி வித்த வீராங்கனைகள் பலவகையிலும் பழி வாங்கப் பட்டனர். ஜிம்னாஸ்டிக் பிரிவில் எவ்வளவு திறமை சாலியாக இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டனர். மறைமுகமாக மிரட்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஜிம்னாஸ்டிக் பயிற்சியின்போது மருத்துவரால் அவருக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து பலமுறை கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். அதிலிருந்து விடுபட மனநல ஆலோசனைக்காக பலமுறை பயிற்சிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 12 மாத கால சிகிச்சைக்குப் பிறகே இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.  இனி எதிர்காலத்தில் எந்த ஒரு வீரரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தனக்கு நேர்ந்ததை சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார் சிமோன் பைல்ஸ். அதன்பிறகுதான் அந்த பயிற்சி மையம் மூடப்பட்டது. குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். மற்றவர்களைவிட எப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற விடா முயற்சியும், கடுமை யான உடற்பயிற்சியும், ஒப்பற்ற திறமையும் சிமோன் பைல்ஸை ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் மிகச் சிறந்த வீராங்கனை என்ற நிலையை எட்ட வைத்தது.

‘கருப்புத் தங்கம்’

2004ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஜிம்னாஸ்டிக் ஆல்ரவுண்ட்  தனிநபர் பெண்கள் பிரிவில் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இதில் அமெரிக்காவுக்காக 2016ஆம் ஆண்டில் தங்கம் வென்றவர் சிமோன் பைல்ஸ்.  ரஷ்ய வீராங்கனை லாரிஸா, செக்கோஸ்லோ வியாவின் வெரா ஆகியோர் மட்டுமே ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ந்து 2 முறை தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றதுடன் அதிக பதக்கங்களை குவித்து  முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். அந்த வர லாற்றுச் சாதனைகளை முறியடிக்கும் திறன் கொண்ட வர் சிமோன் மட்டுமே. 

நிறவெறி

தலைசிறந்த வீராங்கனையும் அடுத்த தலை முறைக்கு ரோல்மாடலாக இருந்து வரும் சிமோன் பைல்ஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் தனித்து மிளிரும் நட்சத்திரமாக திகழ்வார், இரண்டாவது முறையாக தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தமாகுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தன்னால் முழு கவனத்துடன் விளையாட முடியவில்லை என்று வெளியேறினார். குழு பிரிவில் வெள்ளி வென்ற இவர், தனிநபர் போட்டிகளில் ஐந்து பிரிவில் பைனலுக்கு முன்னேறி இருந்தார். அனைத்திலும் பதக்கம் உறுதியானது. ஆனாலும் அந்த களத்தில் இருந்து வெளியேறும் போது அவருடைய மனநிலை, உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் சிமோன் பைல்ஸின் இந்த முடிவு உலகையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க செய்தது. ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் என்னதான் கொடிகட்டிப் பறந்தாலும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை குவித்து இருந்தாலும் அமெரிக்க-ஆப்பிரிக்க பெண் என்பதால் தீராத நிறவெறி பிரச்சனையை எதிர்கொண்டார்.  ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் சிறந்த வீராங்கனை களுள் ஒருவரான சிமோன் பைல்ஸ், ஒலிம்பிக்கில் நான்கு பக்கமும், 19 உலக சாம்பியன்ஷிப் பட்டங் களையும் வென்றிருக்கிறார். தனது மனநலப் பிரச்ச னை குறித்து வெளிப்படையாகப் பேசியதற்காகப் உலகம் முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டார்.

‘வாழ்நாள் சாதனையாளர்’

இந்த பின்னணியில்தான் பிபிசி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது.  ஜிம்னாஸ்டிக் உலகில் கம்பீரமாய் உலா வந்து கொண்டிருக்கும் கருப்பினத்தின் பெண் சிங்கம், தனது மன காயத்தை குணப்படுத்திக் கொண்டு திரும்பவும் களத்தில் இறங்கி மேலும் மேலும் சாதனைகள் படைக்க அனைவரும் வாழ்த்துவோம்...

- சி.ஸ்ரீராமுலு