45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தையில் 2 பதக்கம்
ஆடவர் ரிகர்வ் - வெள்ளி
ஆடவர் ரிகர்வ் அணி பிரிவு இறுதி ஆட்டத்தில் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா, துஷார் பிரபாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, லீ, ஜின், கிம் தென் கொரிய அணியை எதிர்கொண்டது. அரையிறுதி வரை சிறப்பாக விளை யாடிய இந்திய அணி இறுதிச் சுற்றில் பதற்றமாக விளையாடி சொதப்பியது. ஆனால் தென்கொரிய ஜோடி ஒவ்வொரு சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தி 5-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்க த்தை கைப்பற்றியது. அதானு தாஸ், தீரஜ் பொம்ம தேவரா, துஷார் பிரபாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
மகளிர் ரிகர்வ் - வெண்கலம்
மகளிர் ரிகர்வ் அணி பிரிவு வெண்கலப்பதக்கத் திற்கான ஆட்டத்தில் அங்கிதா, பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, டூ தீ, தான்ங் நிஹி, ஹுவாங் தாவோ ஆகியோர் அடங்கிய வியட்நாம் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதாவது 4 செட்டிலும் முன்னிலை வகித்த இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. வில்வித்தையில் இந்தியா விற்கு இது 4 பதக்கமாகும். ஏற்கெனவே காம்பவுண்ட் பிரிவில் 3 தங்கப்பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத் தக்கது.
செபக்தக்ராவில் மகளிர் அணி அசத்தல்
மகளிர் செபக்தக்ரா பிரிவு (ரெகு) 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. தாய்லாந்து அணி செபக்தக்ராவில் பலமான அணி என்பதால், அந்நாட்டு வீராங்கனைகளின் அதிரடியை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி 0-2 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெண்கலப்பதக்கம் வென்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023
13-வது சீசன் உலகக்கோப்பை இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்
இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம்
நேரம் : காலை 10:00 மணி
மழை : வாய்ப்பில்லை, மலை வாசஸ்தலம் என்பதால் சாரலுக்கு வாய்ப்புள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இலங்கை
இடம் : தில்லி மைதானம், தில்லி
நேரம் : மதியம் 2:00 மணி
மழை : வாய்ப்பில்லை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட்ஸ்டார் (இலவசம்)
மீண்டும் காவி
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜெய் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிசிசிஐ மூலம் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் பாஜக தேர்தல் ஆதாயமாக எதையாவது செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் ஜெர்சி வண்ணத்தை (பயிற்சி) காவி வண்ணமாக மாற்றியுள்ளது பிசிசிஐ. அதாவது களத்தில் ஆடிய ஜெர்சியை உடனே மாற்றாமல் பயிற்சி செய்யும் ஜெர்சியை மட்டும் தற்போது மாற்றியுள்ளது. களத்தில் விளையாடும் ஜெர்சி நீல வண்ணம் என அறிவிக்கப்பட்டு மாதிரி வெளியிடப்பட்டாலும், அடுத்து வரும் ஒரு ஆட்டத்தில் காவி வண்ண ஜெர்சியை பிசிசிஐ கண்டிப்பாக அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. காரணம் 2019-இல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் காவி வண்ணத்துடன் இந்திய அணி விளையாடியது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் பாஜகவிற்கு தேவையான வருமானம், பாஜகவின் நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் கிரிக்கெட்டில் ஜெய் ஷா தீவிரமாக செயல்படுத்தி வருவது அறிந்த விசயம்தான்.
புதிய வரலாறு படைத்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியா, வழக்கம் போல சீனாவில் நடைபெற்று வரும் நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் கம்பீரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முக்கியமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெண்கலப்பதக்கத்தை தவிர மற்ற அனைத்து பதக்கங்களிலும் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. நடப்பு சீசனில் இந்தியா 21 தங்கப்பதக்கம், 34 வெள்ளிப்பதக்கம், 36 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 91 பதக்கங் களை குவித்து தனக்குள் 3 புதிய சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.
1. 72 ஆண்டுகளுக்கு பிறகு அதிக தங்கப்பதக்கத்தை (21) வென்றுள்ளது. கடைசியாக 1951இல் நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் (தில்லி) இந்தியா 15 பதக்கங்கள் கைப்பற்றியதே அதிக தங்கப்பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
2. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் வெள்ளிப்பதக்க எண்ணிக்கை 30-யை (33) கடந்துள் ளது. இதற்கு முன் 2018இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுத் தொடரில் 23 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச வெள்ளிப்பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
3.மொத்த பதக்க எண்ணிக்கை யில் இதுவரை இல்லாத வகையில் 90 பதக்கங்கள் என்ற நிலையில், புதிய உச்சத்தில் இந்தியா பயணித்து வருகிறது. 2018இல் (இந்தோனேசியா) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகப்பட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
37 வருடத்திற்கு பிறகு
37 வருடத்திற்கு பிறகு இந்தியா பதக்கப்பட்டியல் 5-க்குள் (4-வது இடம்) முன்னேறியுள்ளது. எனினும் இந்தியா 1962-இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்தியா கீழே இறங்கலாம்... ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு பெற இன்னும் 2 நாட்கள் (அக்., 8 வரை) உள்ளது. உஸ்பெகிஸ்தான் 19 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 63 பதக்கங்களுடன் இந்தியாவிற்கு கீழ் 5-வது இடத்தில் உள்ளது. தங்கம் தான் தரவரிசையை நிர்ணயிக்கும் என்பதால், இன்னும் 2 நாட்கள் இடைவெளியில் மேற்கொண்டு உஸ்பெகிஸ்தான் 3 பதக்கம் வென்றால் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறும். இந்தியா கீழே இறங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் இந்தியா மேற்கொண்டு தங்கப்பதக்கம் வென்றால் மட்டுமே சிக்கலின்றி பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்துடன் தாய்நாடு திரும்பும்.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 185 104 59 348
2.ஜப்பான் 44 55 60 159
3.தென்கொரியா 36 47 83 166
4.இந்தியா 21 34 36 91