19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் அக்டோபர் 8 வரை நடைபெறுகிறது.
துப்பாக்கிச் சுடுதலில் அசத்தல் : இந்தியாவிற்கு 2 தங்கம்
உலக சாதனையுடன் தங்கம் வென்ற சம்ரா
மகளிர் 50 மீ ரைபிள் (3 வகை) துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சம்ரா கவுர் 469.6 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். சீன வீராங்கனை ஜங் 462.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷி 451.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்திய வீராங்கனை சம்ரா கவுர் ஒரே நாளில், உலக சாதனை, ஆசிய சாதனை, பொது சாதனை ஆகிய அம்சங்களை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 75 41 19 113
2.தென்கொரியா 17 18 27 62
3.ஜப்பான் 14 24 22 60
6.இந்தியா 5 7 10 22
25 மீ பிஸ்டல் பிரிவில் மகளிர் அணி அசத்தல்
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மனு பாக்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1759 (68x) புள்ளிகளுடன் கடுமையான போராட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. இந்த பிரிவில் சீன அணி 1756 (97x) புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தென் கொரிய அணி 1742-(53x) வெண்கலப்பதக்கமும் வென்றது.
தமிழ்நாடு வீரருக்கு வெண்கலம்
ஆடவர் டிங்கிலி (ILCA7) பாய்மர படகுப்போட்டி பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சரவணன் விஷ்ணு வெண்கலப்பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீரர் லோ ஜூன் தங்கப்பதக்கமும், தென் கொரிய வீரர் ஹா ஜீமின் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
மகளிர் 50 மீ
ரைபிள் அணி : வெள்ளி
மகளிர் 50 மீ ரைபிள் (3 வகை) துப்பாக்கிச் சுடுதல் அணி பிரிவில் சம்ரா, ஆஷி, கவுசிக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1764 அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. சீன அணி தங்கமும் (1773 புள்ளிகள்), தென் கொரியா அணி வெண்கலப்பதக்கமும் (1756 புள்ளிகள்) வென்றது. சம்ரா 50 மீ ரைபிள் (3 வகை) தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஸ்கீட்
அணி : வெண்கலம்
ஆடவர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பஜ்வா, கங்குரா, நர்குவா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 355 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றனர். சீன அணியினர் தங்கப்பதக்கமும் (362 புள்ளிகள்), கத்தார் அணியினர் வெள்ளிப் பதக்கமும் (359 புள்ளிகள்) வென்றனர்.
மகளிர் 25 மீ
பிஸ்டல்: வெள்ளி
மகளிர் 25 மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் 34 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீன வீராங்கனை லியு 38 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், தென் கொரியா வீராங்கனை யாங் 29 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஸ்கீட்
தனிநபர் : வெள்ளி
ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் நகுரா ஆனந்த் சிங் 58 புள்ளிகளு டன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். குவைத் வீரர் அப்துல்லா 60 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், கத்தார் வீரர் நாசர் 46 புள்ளி களுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். நகுரா ஆனந்த் சிங் ஸ்கீட் அணி வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.